Thursday, January 16, 2014

உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்

உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:
வெள்ளைப் பூண்டு: கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன.
குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க புகழ் மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டி விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த் தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்து விடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.
இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப் பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடு

நகைச்சுவை

நகைச்சுவை: மனைவி எப்போது அழகாகத் தெரிவார்?

1. டாக்டர், நிச்சயமா சொல்லுங்க எனக்குப் புற்றுநோய்தானா?  எதுக்குக் கேட்கறேன்னா ஒரு டாக்டர் ஒரு நோயாளிக்கு புற்றுநோய்க்கு வைத்தியம் பார்த்தாரு, ஆனா அவர் TB ல இறந்துட்டாரு.
கவலைப்படாதீங்க.  நான் உங்களுக்கு வைத்தியம் பார்த்தேன்னா நீங்க நிச்சயம் புற்றுநோயால மட்டும்தான் இறப்பீங்க.

--------

2. இந்த ரவுடியால நம்ம பகுதில தொல்லை ரொம்ப அதிகமாயிடுச்சி.  அவனை இங்கேர்ந்து துரத்த என்ன பண்ணலாம்?

மிஸ்டர் எக்ஸ்: வர தேர்தல்ல நிக்க வெச்சு MLA ஆக்கிடுவோம்.  ஒரு அஞ்சு வருஷத்துக்குத் தொந்தரவு இல்லாம நிம்மதியா இருக்கலாம்.

---------

3. நீங்க என்ன சோப்பு உபயோக்கிறீங்க?

விகாஸ் சோப்பு.  சோப்பு மட்டுமில்ல, ஷாம்பூ, பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஷேவிங் கிரீம் எல்லாம் அதேதான்.

இந்த brand நான் கேள்விப்பட்டதேயில்லையே?

விகாஸ் என்னோட ரூம் மேட்.

----------

4. மிஸ்டர் எக்ஸ் தன் நண்பரிடம்:  என்னோட கல்யாணத்துக்கு ஏன் வரலை?

பத்திரிகை கிடைக்கலை.

நான்தான் அதுல பத்திரிகை கிடைக்காட்டாலும் கண்டிப்பா வந்துடுங்கன்னு எழுதிருந்தேன் இல்ல?

---------

5. மனைவி: இன்னிக்கு சொற்பொழிவில சுவாமிஜி சொன்னாரு, சொர்க்கத்துல கணவனையும், மனைவியையும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க விடமாட்டாங்களாம்.

கணவன்: அதனாலதான் அத சொர்க்கம்னு சொல்றாங்க.

---------

6. ஏங்க?  பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு.  நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க?

நானும்தான் கூப்பிட்டேன்.  அவங்க மாட்டேன்னுட்டாங்க.  அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

--------

7. ஏங்க?  நீங்க கண்ணாடியைக் கழட்டிநீங்கன்னா ரொம்ப handsome ஆ இருக்கீங்க.

நீ கூடத்தான் ரொம்ப அழகாத் தெரியற.

--------

8. ஏன் பள்ளிக்கு இன்னிக்கு தாமதமா வர்ற?

சார், ஸ்கூட்டர் puncture ஆயிடுச்சு.

அதனால என்ன? பஸ் ல வரவேண்டியதுதானே?

அதான் சார் நானும் சொன்னேன், ஆனா உங்க பொண்ணு கேக்க மாட்டேன்னுடுச்சு.

--------

9. அக்பர் யாரு?

தெரியல டீச்சர்.

படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?

தெரியல

உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

---------

10. நேத்து எங்க போயிருந்த?

காதலியோட சினிமாவுக்கு.

எவ்ளோ செலவாச்சு?

முன்னூறு

அவ்ளோதானா?

அரே யார்! அவகிட்ட அவ்ளோதான் இருந்திச்சு.

-------

11. என்னது?  ராத்திரி பூரா உங்க பையன் புக் முன்னாடி உட்கார்ந்தும் தேர்ச்சி பெறலையா?

அவன் உட்கார்ந்திருந்தது facebook முன்னாடியாம்.

-------

12. நர்ஸ் நீங்க என்னோட இதயத்தைத் திருடிட்டீங்க.

அதுக்கு முன்னாடி டாக்டர் உங்க கிட்னியைத் திருடிட்டாரு.

--------

13. எதிர்த்த வீட்டு சுனிதாவைப் பாரு, வகுப்புலயே முதல் மாணவியா வந்துருக்கா.  நீ என்னடான்னா பெயில் ஆயிருக்க.

சுனிதாவைப் பார்த்ததால்தான் mummy.

--------

14. உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?

கூகுள் னு.

ஏன்?

நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.

----

15. என்னது? அவர் எரிஞ்சிட்டிருக்கிற கட்டடத்துலேர்ந்து ஆறு பேரைக் கஷ்டப்பட்டுக் வெளில அழைச்சுட்டு வந்தும் அவரைப்போட்டு மக்கள் கும்மு கும்முன்னு கும்மி எடுத்திட்டாங்களா?

ஆமா, அவர் அழைச்சுக்கிட்டு வந்தது தீயணைப்பு வீரர்களை.

----

16. ஒரு காட்டில் சிங்கத்தின் திருமணம் நடந்தது.  எல்லா மிருகங்களும் நடனமாடிக்கொண்டிருந்தன.  ஓர் ஓரத்தில் எலி ஒன்றும் நடனமாடிக்கொண்டிருந்தது.

அதைப்பார்த்து புலி கேட்டது 'ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'

'என்னோட தம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்'

'அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?'

'திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.

----

17. ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்: என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.

பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?

இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா.  அவளைத் திட்டும்போதெல்லாம் 'உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார்.  அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்'.

----
ஆக்கம்: திருமதி.எஸ்.உமா, தில்லி


வாழ்க வளமுடன்!
நன்றி உமா உங்கள் நகை சுவையை நாங்களும் சுவைத்தோம்