Monday, October 31, 2016

ரிலாக்ஸ் ப்ளீஸ்!-ஸ்ட்ரெஸ் தவிர்க்க ஈஸி வழிகள்!

ணிச்சுமை, பரபரப்பான ஓட்டம். இரண்டும்தான் இன்று நம்மில் பலரின் வாழ்க்கை. வேலை, குடும்பம், கடன்கள், சுமைகள் என நாலா பக்கமும் நெருக்க, மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள, நம் உடலுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும். இதற்கு, மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை, மனம் மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவும்.


மசாஜ், ஸ்பா, லாஃப்பிங் தெரப்பி என எத்தனையோ ரிலாக்ஸிங் டெக்னிக்குகள் உள்ளன. ரிலாக்ஸேஷன் தெரப்பிகளை எப்படிச் செய்வது? இவற்றால் என்ன பலன்கள் என்பதை விவரிக்கிறார் யோகா மற்றும் நேச்சுரோபதி சிகிச்சை நிபுணர் மாலதி.
ஸ்ட்ரெஸ் வாழ்க்கை ஏன்?
எடுத்த எடுப்பில் மன அழுத்தம் மிகக் கெடுதலானது என்று முடிவுகட்டிவிட வேண்டாம். இந்த மனநிலை மட்டும் இல்லை என்றால், மனிதகுலமே தழைத்திருக்காது.
ஆதிகாலத்தில், மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, இந்த மன அழுத்தம்தான் அவனைக் காக்கும் எச்சரிக்கைக் கருவியாக, முதல்நிலைத் தற்காப்பாக இருந்தது.
ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது, உடல் தானாகவே ஏதோ பாதிப்பு என்பதை உணர்ந்துகொள்கிறது. ஒன்று அதை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தப்பி ஓட வேண்டும் என்ற நிலைக்கு உடலைத் தயார் செய்கிறது.
உடனடியாக, அட்ரினல் சுரப்பி அட்ரினலின், கார்டிசோல் உள்ளிட்ட சில ஹார்மோன்களை சுரக்கிறது. இவை உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதயம் வேகமாகத் துடிக்கிறது. தசைகளுக்கு அதிக அளவில் ரத்தம் பாய்கிறது. செரிமானம் போன்ற அந்த நேரத்துக்கு தேவைஇல்லாத சில செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, பிரச்னையை எதிர்கொள்ள முழு உடலும் தயார் செய்யப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ உங்களின்  திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, ‘மனஅழுத்தம்’ (ஸ்ட்ரெஸ்) என்று கூறலாம்.

இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
தற்காப்பு ஆயுதமாக இருந்த ஸ்ட்ரெஸ், இன்று மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறிவிட்டது. இதற்கு, நம்முடைய தவறான வாழ்க்கைமுறையும் ஒரு காரணம்.
மன அழுத்துத்துக்கு என்ன காரணம்?
சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவற்றால் ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது.
மனவிரக்தி
ஓரளவுக்கு சுமாராகப் படிக்கும் மாணவனை, அவனது பெற்றோர் அதிகப் பணம் செலவழித்து பிரபல பள்ளியில் சேர்த்து, படிப்படி என்று சொல்லும்போது, இயலாமையால் அவனுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இவ்வளவு செலவு செய்தும், பையன் சரியாகப் படிக்கவில்லையே என்று நினைத்து பெற்றோருக்கும் அதே பிரச்னை. ஓர் இலக்கை அடைய, பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது, ‘மனவிரக்தி’ ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் உண்மையில்லாத இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், ஒப்பீடுகளையும் மனதில் வைத்து விரக்தியடைகிறோம்.

மாற்றம்
சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது நம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், நம் பொறுமைக்கும், சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம் – திருமணம், பதவி உயர்வு, மகப்பேறுக் காலம், பண வரவு போன்ற சந்தோஷமான நிகழ்வாகவோ… குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நஷ்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வாகவோ இருக்கலாம்.

முரண்பாடுகள்
காலையில் சீக்கிரம் எழுந்தால்தான், நேரத்துக்கு பள்ளி அல்லது அலுவலகம் செல்ல முடியும். ஆனால், ஏழு மணி வரையில் தூக்கம் கண்ணைக்கட்டும். தூங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்… ஆனால், அலுவலகம் செல்ல தாமதம் ஆகும். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இருந்து முரண்பாடுகள் எழுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறோம்.

நிர்பந்தம்
மன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவையே இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும், மனதுக்குப் பிடித்தவாறும் வாழ முடிவது இல்லை.
மனஅழுத்தம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள்…
சுவாச மண்டலம்: இதயம் வேகமாகத் துடிக்கும்போது, மூச்சை அதிக அளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
இதயச் செயல்பாடு: கார்டிசோல் ஹார்மோன் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் ரத்தம் பம்ப் செய்யப்படும்போது, ரத்தக் குழாய்கள், இதயத் தசைகள் அதிக அளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இப்படி நடக்கும்போது, ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படும், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்
மன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிக அளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது, புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இரைப்பையின் செரிமானம்  பாதிக்கப்படும். இதனால் ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிப்பதும் பாதிக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலம்
கார்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்பட்டு விந்தணு உற்பத்தி குறையலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சீரான மாதவிலக்கு வராமை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.  உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் – மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.
மன அழுத்தம் போக்கும் ரிலாக்ஸேஷன் டெக்னிக்
ரிலாக்ஸேஷன் தெரப்பிக்கள், டெக்னிக்குகள் மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியான, தரமான வாழ்வை வாழ உதவுகின்றன. ரிலாக்ஸேஷன் வெறும் மன அமைதியை மட்டும் தருவது இல்லை. பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கான வாய்ப்பையும் அது தடுக்கிறது.  மேக்னட்டிக் தெரப்பி, களிமண் தெரப்பி, ஃபிஷ் ஸ்பா தெரப்பி, ஐஸ் தெரப்பி, நீராவிக் குளியல் உள்ளிட்ட ஸ்பா தெரப்பிக்கள் இதில் முக்கியமானவை.
ரிலாக்ஸேஷன் தெரப்பிக்கள் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

*இதயத் துடிப்பு விகிதம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது.
*ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.
*சுவாசிக்கும் விகிதம் சீராகிறது.
*மன அழுத்தத்துக்கான ஹார்மோன்கள் அளவு குறைகிறது.
*தசைகளுக்கான ரத்த ஓட்டம் சீராகிறது.
*தசை இறுக்கம், அழுத்தம் மறைவதால் வலி நீங்குகிறது.
*மன அமைதி கிடைக்கிறது.
*சோர்வை விரட்டுகிறது.
*கோபம், எரிச்சல் மன உளைச்சலைப் போக்குகிறது.
*தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இதனால், எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் திறன் பிறக்கிறது.

ரிலாக்ஸாக்கும் மூச்சுப் பயிற்சிகள்

பிராணாயாமம்
மூச்சுப் பயிற்சிகளை தரையில் ஒரு விரிப்பை விரித்து, அதன் மீது சப்பணம் இட்டு அமர்ந்துதான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சிகளில் மிகவும் பிரபலமானது பிராணாயாமம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்ய ஏற்றது.
மூக்கின் வலது துவாரத்தைக் கட்டை விரல் கொண்டு மூடி, இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு, இடது துவாரத்தை மோதிர விரலால் மூடி வலது துவாரம் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும்.
மீண்டும் மூச்சை விட்ட வலது துவாரம் வழியாகவே மூச்சை உள்ளே இழுத்து, இடது துவாரம் வழியாக வெளியே விட வேண்டும். இவ்வாறு தினமும் காலை 5-10 முறை செய்யலாம்.
பலன்கள்: உடலில் சேர்ந்த அதீத அழுத்தத்தைக் குறைத்து, நுரையீரலுக்கு அதிகப் பிராண வாயுவை அளிக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகி அந்நாளை உற்சாகமாக்குகிறது. மூளை புத்துணர்ச்சி பெறும். மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும்.
ஷீதலி
இந்த மூச்சுப் பயிற்சியில் நாக்கை வெளியே நீட்டி குழாய் போல உள்பக்கமாக மடித்துக் கொள்ள வேண்டும். இதன் வழியாக மூச்சை உள்ளே இழுத்து மூக்கின் வழியாக வெளியே விடவேண்டும். இப்படி 5 -10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: இது உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும் மூச்சுப் பயிற்சி. மனதை அமைதி அடையச் செய்கிறது. ஆளுமைத்திறனை அதிகரிக்கிறது. பிரச்னையைச் சமாளிப்பதற்கான, மன உறுதியையும் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
சிட்காரி
இந்த மூச்சுப்பயிற்சியில் பற்கள் அனைத்தும் தெரியும்படி வாயை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பல் இடுக்குகள் வழியாக மூச்சை வாய்க்குள் இழுக்க வேண்டும். பிறகு, மூக்கின் வழியாக வெளியே விட வேண்டும். இப்படி, 5-10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: இதைச் செய்யும்போதே, வாயின் உட்பகுதி, அன்னம், நாக்கு ஆகியவை  குளிர்ச்சி அடைவதை உணரலாம். உடல் வெப்பம் குறையும். உடலின் பித்த அளவு குறையும். இந்த மூச்சுப் பயிற்சி ரத்தத்தின் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. இதயத்துடிப்பை சீராக்க உதவுகிறது. திடீர் படபடப்பைக் குறைக்கிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்திறனை மேம்படுத்தும். கணையத்தின் செயல்திறனை அதிகரித்து, இன்சுலின் சுரப்பை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது.

பிராமரி

விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்து, இரு ஆட்காட்டி விரல்களைக்கொண்டு இரு காதுகளையும் இறுக்கமாக அடைத்துக்கொள்ள வேண்டும். வாயை மூடியபடி, தேனீக்கள் போல ‘ம்ம்ம்…” எனச் சத்தம் எழுப்ப வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட இதைச் செய்யலாம்.
பலன்கள்: இப்படிச் செய்யும்போது வெளி சப்தங்கள் எதுவும் காதில் விழாது. இதனால், உடலுக்குள் ‘ரெசோனன்ஸ்’ எனப்படும் அதிகபட்ச ஒலி அதிர்வலைகள் உண்டாகின்றன. இது உடல் முழுதும் பரவி, மனஅழுத்தம், படபடப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது. இந்தப் பயிற்சி, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

ரிலாக்ஸேஷன் தரும் ஆசனங்கள்

மன அமைதி தருவதில் யோகாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தினசரி, யோகா பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். யோகா பயிற்சியாளரிடம் கற்று, அதன் பிறகு யோகா செய்வது நல்லது.
உட்டான பாதாசனம்
“உட்டான” என்றால் தூக்குதல். பாதத்தைத்  தூக்குதல் என்பது இதன் பொருள். தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை செங்குத்தாகத் தூக்க வேண்டும். இதே நிலையில் முடிந்தவரை இருக்க வேண்டும்.

பலன்கள்:
இந்த ஆசனம் வயிறு மற்றும் தொடைத்  தசை வலுவுக்கு மிகவும் நல்லது. இந்த ஆசனம் செய்யும்போதே, உடலில் மெல்லிய அதிர்வை உணர முடியும்.

கோமுக ஆசனம்
“கோ” என்றால் பசு. இந்த ஆசனம் பசுவின் முகம் போலக் காட்சியளிக்கும். விரிப்பின் மீது அமர்ந்துகொள்ள வேண்டும். வலது தொடையை இடது தொடையின் மீது போட்டு, வலது காலை உடலுக்குப் பின்புறம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்ட வேண்டும். வலது கையை உயர்த்தி வலது தோள்பட்டையைத் தொடும்படி வைத்துக்கொண்டு, வலதுகை விரல்களை இடது கை விரல்களால் பிடிக்க வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க வேண்டும்.
பலன்கள்: நுரையீரலுக்கு நல்லது. கை, மணிக்கட்டு நரம்புகள் வலுவடையும்.

பிட்டில் ஆசனம்
பசு மாடுபோல தண்டுவடம் கீழ்நோக்கி வளைந்து காணப்படுவதால், இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது. விரிப்பின் மீது மண்டியிட வேண்டும். பிறகு இரண்டு முன் கை மற்றும் உள்ளங்கைகளை நிலத்தில் பதிந்து, தலையை நேரே பார்த்தபடி வைக்க வேண்டும். தண்டுவடத்தை முடிந்தவரை கீழ் நோக்கி வளைக்க வேண்டும். இதே நிலையில் மூன்று நிமிடங்கள் இருக்க வேண்டும்.

பலன்கள்:
இதன்முலம் சிறுநீரகத்துக்கு மேல் புறம் உள்ள அட்ரினல் சுரப்பி மசாஜ் செய்யப்படுகிறது. கோபம், பயம், படபடப்பு, ஆகியவற்றை அட்ரினல் சுரப்பிதான் கட்டுப்படுத்துகிறது என்பதால், இந்த உணர்வுகள் கட்டுப்படும்.
சஷாங்காசனம்
விரிப்பின் மீது மண்டியிட்டு, பின்னங்கால்கள் மேல் அமர வேண்டும். கைகளை நன்கு முன் நீட்டி உள்ளங்கைகள் நிலத்தில் பதிய படுக்க வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க வேண்டும்.

பலன்கள்:
இதனால் முழு உடலிலும் ரத்தஓட்டம் சீராகப் பாய்கிறது. நினைவுத்திறன் மேம்படுகிறது. கர்ப்பப்பை வலுவடைகிறது. செரிமான மண்டல உறுப்புகள் வலுவடைகின்றன.
மர்ஜரி ஆசனம்
‘மர்ஜரி’ என்றால் பூனை. உடலை பூனை போல வளைத்து ஆசனம் செய்வதால் இந்தப் பெயர். விரிப்பின் மீது மண்டியிட்டு, உள்ளங்கைகளை நிலத்தில் பதிந்து பூனை போல நான்கு காலில் நிற்க வேண்டும்.
நிலம் நோக்கி தலை குனிந்திருக்க வேண்டும். தண்டுவடத்தை இயன்றவரை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இதே நிலையில் மூன்று நிமிடங்கள் இருக்க வேண்டும்.
பலன்கள்: தண்டுவடத்தை மேல்நோக்கி வளைப்பதால், இங்கு உள்ள நரம்புகள் மசாஜ் செய்யப்படுகின்றன. பல மணிநேரம் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் முதுகுவலி, தினமும் காலை ஐந்து நிமிடங்கள் இந்த ஆசனம் செய்வதன் மூலம் குறையும். மனஅழுத்தம் நீங்கும். உடல் வலுவாகும்.
மேக்னெட்டிக் பெல்ட் தெரப்பி (Magnetic belt therapy)
நமது உடலில் இயல்பாகவே மின்காந்த சக்தி உள்ளது. இதுவே உடலின் சமநிலையை மேம்படுத்தி, நாம் நேராக அமர, நிற்க, நடக்க, ஓட உதவும். உடலின் மின் காந்த சக்தி எப்போதும்  ஒரே சீராக இருப்பது அவசியம். இந்த சமநிலை பாதிக்கப்படும்போது, உடல்வலிகள், சதைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேக்னெட்டிக் பெல்ட் தெரப்பியில் சிகிச்சை பெறுபவர் ஒரு மர நாற்காலியில் அமரவைக்கப்படுவார். பிறகு, குறைந்த ஈர்ப்பு விசை உள்ள காந்தங்கள் பொருத்தப்பட்ட பெல்ட் அவருக்குப் பொருத்தப்படும். ஐந்து நிமிடங்கள் இதைக் கட்டி இருப்பதன் மூலம் காந்த அலைகள் உடலில் பாய்ந்து வலிகளை குணமாக்கும்.

பலன்கள்:
இடுப்புவலி, முதுகுத்தண்டுவடப் பிரச்னைகள், உடல் அசதி போன்ற பிரச்னைகள் குணமாகும். இடுப்புத் தசைகள் வலுவடைவதுடன் அடிமுதுகில் ரத்த ஓட்டம் சீரடைகிறது.
லெட் I லெட் V (Lead 1 Lead 5)
இதுவும் காந்த அலைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் தெரப்பிதான். இதில், சிகிச்சை எடுத்துக்கொள்பவர் மர நாற்காலியில் அமர்த்தப்படுவார். அவரது உள்ளங்கை மற்றும் பாதங்களின் அடிப்புறம் அதிக ஈர்ப்புவிசைகொண்ட, சக்திவாய்ந்த நான்கு காந்தங்கள் வைக்கப்படும். இதே நிலையில் 10 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

பலன்கள்:
நமது உடலின் வலது மற்றும் இடதுபுறங்களில் காந்த அலைகள் சென்று இயக்கத்தை சீராக்குகின்றன. கை, கால் வலி, உடல்வலி, மூட்டுவலி, அசதி, சோர்வு நீங்கி உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகின்றன.
மூலிகைக் களிமண் தெரப்பி (Herbal Mud Theraphy)
இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட மண், கரம்பை மண். இதனுடன் முல்தானி மட்டி, ரோஜா இதழ்கள், கோரைக் கிழங்கு, பூலாங் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், வேப்பிலை, குப்பைமேனி, ஆடுதொடா இலை, உப்பு ஆகியவை சேர்த்து அரைக்கப்பட்ட பவுடரை, வயிறு, கழுத்து, கை, கால், முகத்தில் நன்றாகத் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுவே மூலிகைக் களிமண் தெரப்பி.

பலன்கள்:
இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட மண்ணுடன், மூலிகைகளும் சேருவதால், தோலில் உள்ள கழிவுகள் நீங்கும், ரத்த ஓட்டம் சீராகும், உடல் வெப்பம் குறையும். மழைக் காலங்களில், இந்த மூலிகைக் களிமண் தெரப்பியை எடுக்க வேண்டாம்.

கண்களில் போடப்படும் களிமண் பேக் (Mud pack over eyes)
சுத்தமான களிமண்ணை பருத்தித் துணியில் சுற்றி, மூடிய கண்கள் மேல் வைக்க வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் வரை இப்படி இருக்க வேண்டும். 
பலன்கள்: இந்த தெரப்பி மூலமாக, கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். கண்கள் குளிர்ச்சி அடையும். கண் நரம்புகளின் ரத்தஓட்டம் அதிகரிக்கும். தலைவலி குணமாகும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்பதால், மனமும் புத்துணர்வு பெறும்.
இடுப்பில் போடப்படும் களிமண் பேக் (Mud pack over Abdomen)
சுத்தமான களிமண்ணை, பருத்தித் துணியில் வைத்து, இடுப்பைச் சுற்றிக் கட்ட வேண்டும். அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

பலன்கள்:
அடிவயிற்றில் உள்ள பித்தம் தணியும். பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதீத உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மனஅழுத்தம், படபடப்பு ஆகியவை தவிர்க்கப்படும். கர்ப்பப்பைத் தசைகள் இந்தத் தெரப்பி மூலமாக மசாஜ் செய்த பலனைப் பெறுகின்றன.
ஃபிஷ் ஸ்பா தெரப்பி
மீன்களைவைத்து உடல் அழுக்குகளைச் சுத்தம்செய்யும் தெரப்பி. இதற்கென பற்களற்ற குறிப்பிட்ட வகை மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மீன்கள் உள்ள தொட்டிக்குள் கைகள், கால்களை வைத்துவிட்டு, 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். மீன்கள் கை, கால்களில் உள்ள வெடிப்புப் பகுதிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவற்றை உண்ணும். ரசாயனங்களால் பெடிக்யூர், மெனிக்யூர் செய்வதைவிட, இது பாதுகாப்பானது.
பலன்கள்: கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கும், கை, கால்களில் தோற்றம் பொலிவாகும். மீன்கள் கடிக்கும்போது ஏற்படும் கிச்சுகிச்சு மூட்டும் உணர்வால் (Ticklish sensation) மூளையில் உள்ள எண்டார்ஃபின் சுரப்பு அதிகரித்து, மகிழ்ச்சியான உணர்வு மேலிடும். மனம் ரிலாக்ஸ் ஆகும்.
ஐஸ் தெரப்பி
ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுத்தால் போதும். ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ் தெரப்பி செய்யலாம். ஐஸ் தெரப்பியை தொடர்ந்து தர வேண்டியவர்களுக்குச் சளிப்பிடித்தால், நிறுத்திவிட்டு குணமானதும் மீண்டும் தரலாம்.

பலன்கள்:
உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஐஸ் தெரப்பி தரும்போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. சிறுவயதில் உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றிலும் அதீதத் துறுதுறுப்பான (Hyper active) குழந்தைகளுக்கு முதுகுத்தண்டுவடத்திலும் இந்த தெரப்பியைத் தரலாம். வெரிகோஸ் வெயின், முகப்பரு மற்றும் தைராய்டு பிரச்னைக்கும் ஐஸ் தெரப்பி நல்ல தீர்வு. 
நீராவிக் குளியல் (Steam bath)
நீராவி உள்ள அறை அல்லது பிரத்யேக பெட்டிக்குள் சிகிச்சை பெறுபவரை உட்காரவைத்து இந்த சிகிச்சை அளிக்கப்படும். நீராவியால் உடலில் உள்ள நீர்ச்சத்து, கழிவுகளோடு சேர்ந்து வியர்வையாக வெளியேறிவிடும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் 45 டிகிரி வெப்ப நிலையைத் தாங்க முடியாதவர்களுக்கு, அவர்கள் உடல் தாங்கும் வெப்பநிலையில் சிகிச்சை தரப்படும்.
குறிப்பு: நீராவி சிகிச்சை பெறுவதற்கு முன்பும், பின்பும் அதிக அளவு நீர் அருந்த வேண்டும். சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகக் குளிக்க வேண்டும். இதயநோய், ரத்த அழுத்தப் பிரச்னை, வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த சிகிச்சையை எடுக்க வேண்டாம்.
பலன்கள்: நீராவிக் குளியல், உடல் உழைப்பு குறைந்த வேலைகளைச் செய்பவர்களுக்கு உள்ள இறுக்கமான தசைகளைத் தளர்வாக்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராகும். உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடலும் மனமும் ஃப்ரெஷ் ஆகும்.
முதுகுத் தண்டுவட தெரப்பி (Spinal Theraphy)
முதுகுத்தண்டுவடக் குளியலுக்கு என உள்ள பிரத்யேக ‘டப்’பில் சிகிச்சை எடுக்க வேண்டும். டப்பின் மீது முதுகு படும்படி படுத்துக்கொள்ள வேண்டும். முதுகுத் தண்டுவடத்தின் மேல் தண்ணீரானது, நுண்ணிய துளைகள் வழியாக அதிவேகமாகப் பீய்ச்சி அடிக்கப்படும்.

பலன்கள்:
தண்டுவடத்தில் பாயும் அதிக வெதுவெதுப்பான நீரினால் முதுகுவலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தூண்டப்படும். இதனால், உடல் புத்துணர்ச்சி அடையும். சிகிச்சை முடிந்தவுடன் நன்றாகத் தூக்கம் வரும். மனஅழுத்தம், தூக்கமின்மை நீங்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலைசெய்பவர்களுக்கு ஏற்ற சிகிச்சை இது. முதுகுவலி நீங்கும். முதுகுத்தண்டுவடம் வலுவடையும்.

எண்ணெய் மசாஜ் (Oil Massage)
உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய்க் கலவையை ஊற்றி, சுமார் 75 நிமிடங்கள் மசாஜ் செய்யப்படும். கை, கால், வயிறு ஆகிய பகுதிகளில் மட்டும் பிரத்யேகமாகவும் மசாஜ் செய்யப்படும்.

குறிப்பு:
சைனஸ், சளிப் பிரச்னை, காய்ச்சல், சரும நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் எண்ணெய் மசாஜ் செய்துகொள்ளக் கூடாது.

பலன்கள்:
எண்ணெய் மசாஜ் செய்துகொள்வதால், உடல் வெப்பம் குறையும். உடல்வலி குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் புத்துணர்ச்சி அடையும்.
மெழுகு ஒத்தடம் (Wax Treatment)
உடல் தாங்கக்கூடிய வெப்பநிலையில் உருகிய மெழுகை ஒரு துணியில் நனைத்து, எந்த இடத்தில் வலி இருக்கிறதோ, அந்த  இடத்தில் மெழுகு கட்டப்படும். 15 நிமிடங்கள் வரை இப்படி இருக்க வேண்டும்.
பலன்கள்: மெழுகின் சூட்டில், கட்டியின் வீக்கம், வலி குறையும். மாத்திரை மருந்துகள் இன்றி, எளிமையாக இந்த முறையில் வலியைக் குறைக்கலாம். விபரீதமான கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகளுக்கு இந்த சிகிச்சை பயன்தராது. உடலில்  ஏதேனும் வலி, வீக்கம் இருப்பவர்களுக்கான சிகிச்சை இது.
அக்குபஞ்சர் (Acupuncture)
பாரம்பர்ய சீன மருத்துவமுறை. பாதிப்பைப் பொறுத்து, உடலின் முக்கிய அக்கு புள்ளிகளில், அக்குபஞ்சர் குத்தூசியால் குத்தித் தூண்டப்படும். வலியின், பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த சிகிச்சை இருக்கும்.
பலன்கள்: அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் வலியைக் குணப்படுத்தலாம். தொடர் தலைவலி போன்ற எந்த வலிகளாக இருந்தாலும் ஊசி கொண்டு நரம்புகளைத் தூண்டிவிடும்போது, வலி போய்விடும். சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கும்கூட அக்குபஞ்சர் சிகிச்சை உண்டு. ஆனால், அதற்கு டயட்டும் பின்பற்ற வேண்டும்.
ரெஃப்லெக்சாலஜி (Reflexology)
நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்தின் முடிச்சுகளும் கை, கால்களில்தான் சேரும். உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள நரம்புகளின் மேல் குறிப்பிட்ட அழுத்தம் கொடுத்து அழுத்தும்போது, அந்த நரம்புகள் தூண்டிவிடப்பட்டு அதன் வேலையைச் சரியாக செய்யும். இந்த சிகிச்சையில் கை, கால்கள் தொடர்ந்து 30 நிமிடம் நன்றாக அழுத்திவிடப்படும். ஒருமுறை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின், கை கால்களில் எந்த இடத்தில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டால், வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.
பலன்கள்: கை, கால் வலி, உடல் வலி, அசதி, சோர்வு நீங்கும். உடல், மனம் புத்துணர்வு அடையும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

மனசை ரிலாக்ஸாக்க ஈஸி டிப்ஸ்

மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைத்திருப்பது நம் கைகளில்தான் உள்ளது.உங்களுக்கான மகிழ்ச்சியை உங்களால் மட்டுமே உருவாக்க முடியும். அது எந்த வகையில், எப்படி என்கிற விடையும் உங்களுக்குத் தெரியும்.
விளையாட்டு, பயணம், ஓவியம், இசை, தோட்டம், வாசிப்பு, குழந்தைகள், செல்லப் பிராணிகள் என, எதில் உங்கள் மகிழ்ச்சியின் சாவி மறைந்துள்ளது எனக் கண்டுபிடியுங்கள்.செய்யும் வேலை, தங்கியிருக்கும் வீடு, உடன் வாழ்பவர்கள், எதிர்கொள்ளும் நபர்களை முதலில் புரிந்துகொண்டு, நல்ல சூழலை உருவாக்கிட முயற்சி எடுங்கள்.

நம்முடைய கருத்துக்கு எப்போதுமே எதிர்கருத்தைத் தெரிவிப்பவர்களைத் திருத்துவது, நம்முடைய வேலை இல்லை. விரும்பத்தகாத சூழலையும் நபர்களையும் விட்டு விலகுவது, பல விதங்களில் நன்மை தரும்.
மாறுபட்ட சிந்தனைகளையும், விசாலமான இதயத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் முன்பு, நம்மிடம் உள்ளதா எனச் சரிபார்த்து, திருத்திக்கொள்ளுங்கள்.
மனதை லேசாக்க வேடிக்கையான வீடியோக்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்.
நமக்குப் பிடித்தமானவர்களுடன் நேரத்தைச் செலவிடலாம்.
பிடித்தமான உணவை ரசித்து ருசிக்கையில், மகிழ்ச்சி தரும் உணர்வுகள் உருவாகும்.
மணம் கமழும் நறுமணங்கள் நிறைந்த சூழலில் இருந்தால், மனம் லேசாகும். இதற்காக நிறைய அரோமா எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல், அடிக்கடி பயணம் செய்யலாம். புதிய புதிய இடங்களைப் பார்க்கும்போது, மனம் அதில் கவனத்தைச் செலுத்தும். பதற்றம் அடையும் தன்மை குறையும்.
தினசரி உடற்பயிற்சி செய்வது உடலை ஃபிட்டாக்குவதுடன் மனதுக்கும் ஓய்வைத் தரும். ஆழ்ந்த தூக்கம் வரும்.
குழுவாக இணைந்து செய்யக்கூடிய ஏரோபிக்ஸ் நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இது மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.
நண்பர்கள், குழந்தைகளுடன் நேரம் கிடைக்கும்போது எல்லாம் விளையாடலாம். உடலும் ஃபிட்டாகும். பிரச்னையை எதிர்கொள்ளும் பக்குவம் கிடைக்கும்.
தினசரி உணவில், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். எந்த உணவை உண்டாலும் நன்கு மென்று உண்ணும் பழக்கத்தால், ஹார்மோன்கள், நொதிகள், உள்ளுறுப்புகளின் வேலை சுலபமாகும்.

முடியாதவற்றுக்கு, துணிந்து ‘நோ’ சொல்லிப் பழக வேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்ய வேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதில் உறுதியாக இருங்கள்.
பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல், மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க, நேர மேலாண்மை முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை அந்த நேரத்தைத் தாண்டியும் செய்ய முடியவில்லை என்றால், மன அழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு வேலையை முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைப் போக்க மிகச்சிறந்த வழிகளில் ஒன்று. அன்பை அள்ளித்தந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவை செல்லப்பிராணிகள். நாய்,  பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் சில நிமிடங்கள் நேரத்தைச் செலவிடுவதும்கூட செரடோனின், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கச்செய்யும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மனப்பதற்றம் குறைகிறது. நோய் எதிர்ப்பு மண்டலச் செயல்பாடு மேம்படுகிறது.
கிரீன் ரிலாக்ஸ்
செடிகளை வளர்ப்பது தனிமையை விரட்டி,  மன அமைதிக்கு வழிவகுக்கும். எப்படி ஒரு வளர்ப்புப் பிராணி நமக்கு ஆறுதல் தருகிறதோ, அதுபோலத்தான் செடிகளும். பூக்களை, செடிகளை இரண்டு நிமிடங்கள் உற்று நோக்குங்கள். சங்கடமான மனமும் அமைதி பெறும்.
செடிகள், வெறும் அழகியல் தொடர்பானவை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மாற்றும் தன்மை பெற்றவை.
லெமன் கிராஸ்: இது கொசுக்களை வீட்டில் அனுமதிக்காது. இதன் இலையைக் கசக்கி சுவாசித்தால், எலுமிச்சை மணம் வீசும். இந்த நறுமணம், கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டியடிக்கும். இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால், வயிறு உப்புசம் குணமாகும்.
மின்ட் துளசி: மின்ட் உள்ள மிட்டாய்களோ, சூயிங்கம்மோ சாப்பிட்டால் எப்படியிருக்குமோ, அத்தகைய சுவையை இந்த செடியின் இலைகள் தரும். சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி.
ஆல் ஸ்பைசஸ்: இந்தச் செடி வீட்டில் இருந்தால், சமையலுக்கு எந்தவித மசாலா பொருட்களும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ போன்ற அனைத்துப் பொருட்களின் நறுமணத்தையும் இந்தச் செடியின் இலைகளே தந்துவிடும்.
சிறியாநங்கை: பாம்பு, பூரான் போன்ற விஷக்கடிக்கு முதலுதவி மருந்து.
பேசில்: இந்த இலையில் கிரீன் டீ போட்டுக் குடிக்கலாம். உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
ஆலோவேரா: கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசிவந்தால், பருக்கள், வடுக்கள் மறைந்து முகம் பிரகாசிக்கும். மோருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் குடித்தால், கர்ப்பப்பை பிரச்னைகள் தீரும்

Monday, October 17, 2016

தூக்கம் எனும் மாமருந்து

தூக்கம்தான் நம் வாழ்வை முழுமையாக்குகிறது.  ஆழ்ந்த  தூக்கம் ஆரோக்கியத்தின் அடிப்படை. தூக்கத்தில்தான் நமது உடல் தனக்குத் தேவையான ஆற்றலைத் திரட்டி, உறுப்புகளைப் புத்துணர்வாக்கி, அடுத்தநாளை எதிர்கொள்ள நம்மைத் தயாராக்குகிறது. சோர்வடைவதால் தூங்குகிறோம் என நினைக்கிறோம். உண்மையில், சோர்வடையாமல் புதுப்பித்துக்கொள்ளவே நாம் உறங்குகிறோம்.


மனதைக் கட்டுப்படுத்தவும், கோபம், துக்கம் ஆகியவற்றைக் குறைக்கவும் இயற்கையாகப் படைக்கப்பட்ட செயலே தூக்கம். இன்றைய கேட்ஜெட்ஸ் உலகில் பலரும் பின்னிரவுகளில்தான் தூங்குகிறார்கள். இளைய தலைமுறையினர் மொபைலிலும் இணையத்திலும்தான் வாழ்க்கையையே நடத்துகின்றனர். இதனால், தூக்கமின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. தூக்கமின்மையால் பல பாதிப்புகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தூக்கத்தைத் தூண்டும் மெலட்டோனின்
*நம் உடலின் உறக்கச் சுழற்சி, அதாவது நாம் உறங்கும் நேரம், எழும் நேரம் ஆகியவற்றைத் தீர்மானிப்பது மெலட்டோனின் எனும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் இரவில் சுரக்க ஆரம்பித்து காலையில் நின்றுவிடும். நாம் மெலட்டோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை இரவில்
உண்ண வேண்டும். இதனால், சீக்கிரம் உறங்கிவிடலாம்.

*இரவில் அதிக அளவு கிளைசமிக் இண்டெக்ஸ் (Glycemic Index)  உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் பி6 அதிகம் இருக்கும். இது, மெலட்டோனினைச் சுரக்கச் செய்கிறது.
*இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, பால் குடிப்பது, மெலட்டோனினைச் சுரக்கச் செய்கிறது. நம் உடலில் உள்ள கால்சியம், தசைகளைத் தளர்வடையச் செய்வதால் தூக்கம் வரும். எனவே, கால்சிய சத்துக் குறைந்தாலும், தூக்கம் வருவதில் பாதிப்பு ஏற்படுகிறது.  
*தேன் நம் உடலில் டிரிப்டோபான் (Tryptophan) எனும் அமினோஅமிலத்தைச் சுரக்கச் செய்யும். இதுவே, மெலட்டோனினைச் சுரக்கச் செய்யும் வேதிப்பொருள்களில் ஒன்றாகும்.  இரவு பால் குடிக்கும் போது, அதில் இரண்டு மூன்று டீஸ்பூன் தேன் கலந்து குடிப்பதன் மூலம் நல்ல தூக்கம் வரும்.
*ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ் உள்ளிட்ட உணவுகளும் டிரிப்டோபானைச் சுரக்கச் செய்கின்றன. மேலும், நம் மனதை உற்சாகப்படுத்தும் செரோடோனின் (Serotonin)  எனும் ஹார்மோன், ஓட்ஸ் உண்பதன் மூலம் சுரக்கிறது.
*பொட்டாசியமும் மக்னீசியமும் தசைகளைத் தளர்வடையச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் நிறைந்துள்ள வாழைப்பழத்தைத் தூங்கும் முன்பு உண்ணலாம். இதனால், செரிமானமும் மேம்படும்.
*பாதாமில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இரவில் பாதாம் பால் குடிக்கலாம்.
ஆழ்ந்த தூக்கத்துக்கு… 
*வெளிச்சத்தில் மெலட்டோனின் சுரக்காது. அதனால், இருட்டான அறையில்தான் தூங்க வேண்டும்.
*ஏதேனும் ஒரு சொல்லை மந்திரம் போல் முணுமுணுத்துக்கொண்டே இருக்கலாம்.
*இரவு சாப்பிட்டுவிட்டு, அரை மணி நேரம் கழித்துக் கொஞ்ச நேரம் மிதமான நடைப்பயிற்சி செய்யலாம். இது, தூக்கத்தைத் தூண்டும்.
*மனதுக்கு இதமான பாடல்களைக் கேட்கலாம். ஹெட்போன் அணிந்து கேட்கக் கூடாது. அதிக சப்தம் இல்லாமல் 5-10 நிமிடங்கள் பாடல்களைக் கேட்டுவிட்டு, உறங்கச் செல்லலாம்.
*இடதுகைப் பக்கமாக உறங்கினால் நெஞ்செரிச்சல் வராது. செரிமானம் மேம்படும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
*தூங்குவதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே, டிவி, மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை ஆஃப் செய்துவிட வேண்டும். காரணம், நாம் பார்க்கும் ஒளி பிம்பங்கள், நம் விழித்திரையில் இருந்து அகலாதவரை, மெலட்டோனின் சுரப்பு நடக்காது.


தூக்கத்தைக் கெடுக்கும் உணவுகளும், பழக்கங்களும்:
*காஃபின் (Caffeine) உள்ள உணவு, காபி, டீ போன்றவற்றைத் தூங்குவதற்கு  இரண்டு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள கூடாது.
*இரவில் ஃபாஸ்ட் ஃபுட் கூடவே கூடாது. பர்கர், பீட்ஸா போன்றவை தூக்கத்தைத் துரத்தும் வில்லன்கள்.
*மைதா உணவுகளும் தூக்கத்தைப் பாதிக்கும்.
*கார்பனேடட் பானங்கள், கோலா, சோடா கலந்த பானங்கள் தூக்கத்தையும் பாதிக்கும் செரிமானத்துக்கும் தீங்கு.
*உறங்கும் நேரத்தில் அதிகமாகத் தண்ணீரோ, நீர்ச்சத்து மிகுந்த உணவுகளோ எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். காரணம், இரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டியது இருக்கும். இது தூக்கத்துக்கு இடையூறாக மாறலாம்.

தூக்கமின்மை உருவாக்கும் பாதிப்புகள்
*மனம் சார்ந்த பிரச்னைகள்
*ஜீரண மண்டலப் பிரச்னைகள்
*இதய நோய், ஞாபக மறதி
*கோபம், எரிச்சல், மனஅழுத்தம்
*உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்

எஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு… வருமான வரி கணக்கீடு எப்படி?

ண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுவும் ஒவ்வொரு மாதம் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) முறையிலான முதலீடு உயர்ந்துள்ளது.
இந்த எஸ்ஐபி முறை முதலீட்டின் மீதான வருமான வரி விதிப்பானது, ஃபண்ட் வகைகளைப் பொறுத்தும், ஃபண்டுகளில் செய்துள்ள முதலீட்டை எவ்வளவு காலம் கழித்து விற்பனை செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

 
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகளை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் (ஈக்விட்டி ஃபண்டுகள்), கடன் சார்ந்த ஃபண்டுகள் (டெட் ஃபண்டுகள்) என இரு வகைகளாகப் பிரிக்கலாம். அதாவது, ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 65 சதவிகிதத்துக்கு மேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பின், அது பங்குச் சார்ந்த ஃபண்டுகள் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் கடன் சார்ந்த ஃபண்டுகள் என்று கொள்ளலாம். 
இவை இரண்டுக்கும் வருமான வரிக் கணக்கிடும் முறையிலும் மற்றும் வரி விதிப்பு சதவிகிதத்திலும் வேறுபாடு இருக்கிறது என ஏற்கெனவே பார்த்தோம். எனவே, அது குறித்து தெளிவு பெறுவது மிகவும் அவசியம். (பார்க்க வரைபடம்)
முதலீட்டாளர் ஒருவர் இரு வேறு தேதிகளில் பங்குச் சார்ந்த மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துள்ளார். அவர் வாங்கிய யூனிட்களை விற்கும்போது ஒவ்வொரு முதலீட்டுக்கும் 12 மாதங்கள் (பங்குச் சந்தை) அல்லது 36 மாதங்கள் (கடன் ஃபண்டுகள்) என வைத்திருக்கும் கால இடைவெளியைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, ஒருவர் 2016 ஜனவரி 1-ம் தேதி பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் ரூ.10,000 முதலீடு செய்கிறார். அவருக்கு 100 யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவர் அதே ஃபண்டில் மீண்டும் 10,000 ரூபாயை 2016 ஜூன் 1-ம் தேதி முதலீடு செய்கிறார். சந்தை ஏறிக் காணப்பட்டதால், அவருக்கு 80 யூனிட்கள் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர் கணக்கில் மொத்தம் 180 யூனிட்கள் சேர்கிறது.
இவர் சுமார் ஓராண்டு கழித்து ஜனவரி 5,      2017-ல் 150 யூனிட்களை விற்கிறார் என வைத்துக்கொள்வோம்.  இதில் அவர் ஓராண்டுக்கு முதலீடு செய்த 100 யூனிட்கள், முதல் 100 யூனிட்களாகக் கணக்கிடப்படும். அது நீண்ட கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு லாபத்துக்கு வரி எதுவும் விதிக்கப்படாது.
மீதமுள்ள 50 யூனிட்கள் ஜூன் 1, 2016-ல் செய்த முதலீட்டின் மூலமான 80 யூனிட்களின் ஒரு பகுதி எனக் கருதப்படும். அது குறுகிய கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வரி (15%) விதிக்கப்படும்.

இதேபோல்தான் கடன் ஃபண்டுகளில் செய்யப்படும் எஸ்ஐபி முதலீட்டுக்கும் வரி விதிக்கப்படும். இங்கு நீண்ட கால முதலீடு என்பது மூன்று ஆண்டுகள் ஆகும்.
இப்படி வகைப்படுத்தப்பட்டபின் அதற்கான வரியைக் கணக்கிட்டு செலுத்தவேண்டும்.
சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், முதலீட்டில் கூடுதல் லாபம் பார்க்க முடியும். உதாரணமாக, நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறீர்கள். பிற்பாடு பங்கை விற்கப் போகிறீர்கள். அப்போது முதலீடு செய்து 362 நாட்கள் முடிந்துள்ளன. நீங்கள் இன்னும் மூன்று நாட்கள் கழித்து விற்றால் வருமானத்தில் 15% வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்.
வருமானத்தை எந்த அளவுக்கு முக்கியமாக நினைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வருமான வரியை மிச்சப்படுத்துவது என்பதும் முக்கியம்.
நீங்கள் வரி கட்டுவதை புத்திசாலித்தனமாக மிச்சப்படுத்தும் பட்சத்தில்,  உங்கள் முதலீட்டுக்கான வருமானம் கூடுதலாக கைக்கு கிடைக்கும் என்பதை சொல்லத் தேவையில்லையே

Friday, October 14, 2016

வாஸ்து வழிகாட்டி-சக்தி விகடன்

உங்கள் இல்லத்தில் குறைகள் நீங்கிட, வளங்கள் பெருகிட
வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வளம் தரும் வாஸ்து!
குடும்ப வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாஸ தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாஸிகளுக்கு ஆசிரமம் என்பது முக்கியம். நாட்டைக் காக்கும் மன்னனுக்கு அரண்மனை அவசியம். உலகில் பிறந்த ஜீவன்கள் வழிபட்டுத் தங்களை தூய்மைப் படுத்திக்கொள்ள ஆலயம் அவசியம். இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அங்கு சுகமும் நிம்மதியும் உண்டாகும்.

மனிதன் படைத்த வசதி வாய்ப்புகளை இயற்கை சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல் என்றும் வாஸ்து சாஸ்திரத்தைச் சொல்லலாம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.
வாஸ்துவுக்கான தெய்வத்தை வாஸ்து புருஷன் என்று வணங்குகிறோம். வாஸ்து புருஷன் என்பவர் பகவான் நாராயணனின் அம்சம். இந்தப் பூவுலகம் அவரது உடலேயாகும். இந்த உலகில் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் அவரது அனுமதி பெற்றே செய்யப்பட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வாஸ்து என்றால், பொருட்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழ்வார்கள் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் சாரம் ஆகும்.
நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் ‘ஸ்தாபத்திய வேதம்’ என்ற பகுதியில், ‘வாஸ்து சில்ப சாஸ்திரம்’ என்ற தலைப்பில் வீடுகளை, கட்டடங்களை வடிவமைப்பதும் கட்டுவதும் தொடர்பான அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. எவன் ஒருவன் வாஸ்துவை முறையாக மதிக்கிறானோ அவன் திரண்ட செல்வத்தையும், குடும்ப வாரிசுகளையும், சொத்துக்களையும், இகபர இன்பங்களையும் தவறாமல் அடைகிறான்.
தகுந்த விகிதாசாரத்திலான பஞ்சபூதங்களின் சேர்க்கையே வாஸ்து. இதில் நம்மால் செயல்படுத்த சாத்தியமான நிலம், நெருப்பு, நீர் ஆகியவற்றையாவது முறைப்படி சேர்த்து, வாஸ்து முறைப்படி கட்டடங்களை அமைத்துப் பலன் காண வேண்டும்.
நான்காம் இடமும் கிரகங்களும்!
ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்கு பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்துக் 4-ஆம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.
ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந் திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். எனினும், குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும்.
ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் புதன் அமையப் பெற்றிருந்தால், கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும். 
ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் அந்திம பாகத்தில் சிறப்பான வீடும், மனை யோகமும் கிடைக்கும். இவர்களுக்கு, எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் தோஷம் ஏற்படாமல், குலம்  தழைத்தோங்கும்.
ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப் பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோன்று எத்தகைய அமைப்புள்ள வீடும் இவர்களுக்கு துன்பம் தராது. அதேநேரம்… தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும், நான்கில் சுக்கிரன் இருந்து நல்ல வீடுவாசல் அமையப் பெற்றாலும் வீட்டில் அமைதி ஏற்படுவது கஷ்டம். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. வேறு பரிகாரங்கள் அவசியம்.
ஜன்ம லக்னத்துக்கு 4-ம் வீட்டில் சனி இருப்பின், கல்விகேள்விகளில் முழுமை அடையாமல் போவதாலோ, தகுதியற்றவர்களின் நட்புறவாலோ குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். ஆசாரம் குறைவுபடும். சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும்.
ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். அதேபோன்று அடிக்கடி வீடுவாசலையும் மாற்ற வேண்டியது வரலாம்.
ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வீடு வாசல் இழப்புகள் ஏற்படும். பூர்விகச் சொத்து இருந்தாலும் பயன் இருக்காது. இவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்துசுகங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாந்தி இருப்பின், செல்வச் செழிப்பு ஏற்படும். ஆனால், மாந்தி அமைந்துள்ள ராசியாதிபதி லக்ன கேந்திரம் பெற வேண்டும். அப்போதுதான் நல்ல வீடுவாசல் அமையும்.
ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மாந்தியுடன் சம்பந்தப்பட்டால் கிரக தோஷ பரிகாரங்களால் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பாலும் இவ்வாறான அமைப்பு உடையவர்களுக்கு மனை வீடு போன்றவை… ஒரு காலத்தில் களவு, கொலை நடந்த இடங்களிலோ, மயானங்களின் அருகிலோ இயற்கையாகவே அமைந்துவிடும். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது.
இனி, வாஸ்து சாஸ்திரத்தின் வழிகாட்டலைக் காணலாம்.
மனையைத் தேர்வு செய்வது எப்படி?
வீட்டுக்காக வாங்கும் நிலங்களை உத்தமமானதாக தேர்வு செய்ய வேண்டும். உண்டு புசிக்கத் தகுந்த காய், கனிகளைத் தரக்கூடியதும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதுமான செடி-கொடிகளும் வீடு வாங்கும் பகுதியில் இருக்க வேண்டும். வேம்பு மாதிரியான பால் சுரக்கும் விருட்சங்கள் அங்கு இருப்பது கூடுதல் விசேஷம்.
நெல் வயல்கள், ஓங்கி உயர்ந்த மலைகள், சமுத்திரம், ஆசிரமம், மயானம் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங்கக் கூடாது. அதேபோன்று வீட்டு மனை எப்படியிருக்க வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
உரிய மனைகள் எவை?
கோ வீதி: கிழக்கு மூலை தாழ்ந்து மேற்கு உயர்ந்திருக்கும் நிலப் பகுதி கோ வீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் அபிவிருத்தி ஏற்படும்; வளம் பெருகும்.
ஜல வீதி: கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி ஜல வீதி எனப்படும். இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கக் கூடாது.
யம வீதி: வடக்கு  மூலை உயர்ந்திருந்து, தெற்கு மூலை தாழ்ந்திருக்கும் பகுதி யம வீதி எனப்படும். இந்த நிலமும் வீடு கட்ட உகந்ததல்ல.
கஜ வீதி: தெற்கு மூலை உயர்ந்திருந்து, வடக்கு  மூலை தாழ்ந்திருக்கும் நிலப்பகுதி, கஜ வீதி ஆகும். இங்கு வீடுகட்டுவது விசேஷம்.
பூத வீதி: வடகிழக்கு மூலை சற்று உயர்ந்திருந்தாலும், தென்மேற்கு மூலை தாழ்ந்திருந் தாலும் அந்த நிலம் பூத வீதி ஆகும். இது, வீடுகட்டுவதற்கு உசிதமானது அல்ல.
நாக வீதி: தென்கிழக்கு மூலை உயர்ந்திருந்தாலும், வடமேற்கு மூலை தாழ்ந்திருந்தாலும் அங்கே வீடு கட்டுவது கூடாது. இதை நாக வீதி என்பார்கள்.
அக்னி வீதி: வடமேற்கு மூலை உயர்ந்திருந்து, தென்கிழக்கு பகுதி தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதி வீடுகட்ட சிறப்பானது. இதை அக்னி வீதி என்பார்கள்.
தான்ய வீதி: நிருதி மூலை உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் உள்ள நிலப்பகுதியை தான்ய வீதி என்பார்கள். இதுவும் வீடுகட்ட உகந்ததாகும்.
வீட்டு மனை வாங்க ஏற்ற காலம் !
வீட்டுமனையை வாங்கும் காலம்… கடக லக்னமாக அமைவதும், அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு. நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன், கேது இணைந்திருந்தாலும் சிறப்புதான்!
வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம் மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாட்கள் விசேஷமானவை.
தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்; மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்; வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்; கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்.
ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம் மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அஸ்வினி,  சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை.
சித்தயோகம், அமிர்தயோக காலமானது கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லை பதிக்கவும் ஏற்றது.
மாதங்களும் திசைகளும்…
கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் வேலையை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.
வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் துவங்குவது சிறப்பு.

தெற்குத் திசை பார்த்த வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் துவங்குவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்கள் தவிர்த்து ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. இவற்றை கோண மாதங்கள் என்பார்கள். இந்த மாதங்களில் கட்டடம் கட்டத் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். அதேநேரம், இடம் வாங்குவது போன்ற செயல்களில் தாராளமாக ஈடுபடலாம்.
கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கான காலம்!
ரோகிணி, மிருகசீரிடம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது. அதேபோன்று கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியன விசேஷமானவை. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்களைத் தவிர்த்துவிடலாம்.
அஷ்டம சித்தி என்று ஒன்று உண்டு. அதாவது எந்த லக்னத்தில் வீடு கட்ட ஆரம்பிக் கிறோமோ, அதற்கு எட்டாவது இடத்தில் பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியன இருக்கக்கூடாது. புதன் தனித்தி ருந்தால் தப்பில்லை. சூரியன் அல்லது செவ்வாயோடு சேர்ந்து இருக்கக் கூடாது. ராகு, கேது போன்றவையும் இருக்கக் கூடாது. எட்டாம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும்.
கட்டட பணி துவங்குமுன்…
முதலில், வீடு அல்லது தொழில் நிலையம் எதுவாக இருந்தாலும், அதற்கான கட்டடம் கட்டப்போகும் பிளாட்டில் முட்புதர்கள், கற்கள், இதர விரும்பத் தகாதப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிளாட்டின் நிருதி மூலையான தென்மேற்கு பகுதி 90 டிகிரியில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். அப்படி இல்லையெனில் 90 டிகிரியில் இருக்கும்படி நிலத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். நிருதி மூலை 90 டிகிரியைவிட குறையவும் கூடாது; கூடவும் கூடாது.
* தெற்கிலும் மேற்கிலும் வெட்டவெளியாக அமைந்திருக்கும் பிளாட்டில் வீடு கட்டும்போது, நிருதி மூலையை சரிப்படுத்தி, முதன்முதலில் மதிலைக் கட்டிக்கொள்வது மிகவும் நல்லது.
* அடுத்ததாக வீட்டுக்கும், மதிலுக்கும் இடையில் உள்ள காலியிடத்தை… தெற்கைவிட வடக்கில் அதிகமாகவும், மேற்கை விட கிழக்கில் அதிகமாகவும் இருக்கும்படி சரிசெய்து கொண்டு, வானக்கால் தோண்டவும். எதிரெதிர் மூலைக்குள்ள தூரம் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.
* மதிலுக்கும் சரி, வீட்டுக்கும் சரி… முதன் முதலில் வானக்கால் தோண்டும்போது ஈசானிய மூலையில் தோண்ட ஆரம்பிக்கவும். அதன்பிறகு, கடைசியாக நிருதி மூலையில் (தென் மேற்கு) கடைக்கால் தோண்டும் வேலையை முடிக்கவும்.
அதேபோன்று முதன்முதலில் கட்டுமான வேலையை ஆரம்பிக்கும் போது நிருதி மூலையில் (தென்மேற்கு) ஆரம்பித்து, ஈசானிய மூலையில் (வடகிழக்கு) முடிக்கும்படி கட்டவும்.
மேலும், கட்டட வேலைக்கு முதன் முதலாக மணல் அடிக்கும்போது, பிளாட்டுக்குள் அல்லது பிளாட்டுக்கு வெளியே நிருதி மூலையில் (தென்மேற்கு பகுதியில்) அல்லது மேற்கில்தான் குவிக்கவேண்டும். வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கவே கூடாது. இதன் அடிப்படையிலேயே கற்கள் மற்றும் செங்கற்கள் முதலானவற் றையும் குவிக்கவேண்டும்.

வீடு கட்டும்போது…
தினசரி கொத்தனார் வேலையை முடிக்கும்போது தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களைவிட, ஒரு செங்கல் அளவாவது உயரமாக இருக்கும்படி அமைத்து,  கட்டுமான வேலையை முடிக்கவும். கட்டட கட்டுமானத்தில் முக்கியமானது, வாசல்களை நிர்மாணிக்கும் தருணம். எனவே, வாஸ்து பிளானில் உள்ளபடி, உரிய இடங்களில் வாசல்களுக்கு இடம் விட்டுக் கட்டவேண்டும். அதுபோல், எல்லா அறைகளையுமே நான்கு  மூலைகள் இருக்குமாறு கட்ட வேண்டும். குறைந்தபட்சம் நான்கரை அங்குலம் அளவில், ஒவ்வோர் அறைக்கும் நான்கு மூலைகளுக்கும் மடக்கு வைத்து செங்கல் கட்டுமானம் கட்டிய பிறகே, நிலைக்கால் வைக்க வேண்டும்.
தள கான்கரீட் போடும்போது நிருதி மூலையில் துவங்கி ஈசானிய மூலையில் முடிக்கவும். அதேபோல், கூரை அமைப்புக்கு சென்ட்ரிங் பலகை அமைத்தல், கம்பி கட்டுமானம், கான்கிரீட் போடும் வேலைகளை நிருதி மூலையில் ஆரம்பிக்கவும்.
லாஃப்ட் கான்கிரீட் அமைக்க விரும்பினால், அறைகளின் தெற்கு மற்றும் மேற்குச் சுவரில் அமைக்கவும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அமைக்கவே கூடாது. மாடி கைப்பிடிச் சுவர் தெற்கைவிட வடக்கிலும், மேற்கைவிட கிழக்கிலும் உயரமாக இருக்கக் கூடாது. நான்கு புறமும் சமமாக இருக்கலாம்.
மாடியில் மழை நீரும், வீட்டைக் கழுவிவிடும் நீரும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசைகளில் வெளியேறும்படி மடைத் துவாரங்கள் அமைக்கவும்.
வீட்டின் தளம் நிருதி அறையில் உயரமாக அமைக்கவும். ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிட தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில் எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.
பால்கனி அமைப்பதாக இருந்தால், கூரை சென்ட்ரிங் அமைக்கும்போதே, வீட்டுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும்.
தெற்கிலும், மேற்கிலும் போர்டிகோ அமைத்தால் கூரை மட்டத்துக்கு அமைக்கவும். செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்கவேண்டும். இடத்துக்கு ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் ‘சம்ப்’ (பூமிக்குள் தண்ணீர் தொட்டி) அமைக்கலாம்.மதிலின் உயரம் குறைந்தது 11 அடி அளவுக்கு இருப்பது சிறப்பு (கொடைக்கானல், ஊட்டி முதலான மலைவாழிடங்கள் நீங்கலாக) சமையல் அறையில் சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக் கூடாது. வடக்குச் சுவருக்கும், ‘சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கட்டவும்.
மர வேலைகள் செய்யும்போது…
வீடுகளுக்குப் பயன்படும் மரங்களை ஆண் மரம், பெண் மரம், நபும்சக (அலி) மரம் என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். அடிமரம் முதல் நுனிவரையிலும் ஒரே அளவாக இருந்தால் ஆண் மரம். அடிப் பகுதி பருத்தும் நுனிப் பகுதி சிறுத்தும் இருந்தால் பெண் மரம். ஓர் ஒழுங்கற்ற அமைப்பில், நுனிப் பகுதி பெருத்தும், அடிப் பகுதி சிறுத்தும் இருந்தால், அது அலிமரம் எனச் சொல்லப்படுகிறது.
தூண்கள், உத்திரம், நிலை, கதவு போன்ற கட்டுமானத்துக்கு தேவையான மரங்களை வைரம் பாய்ந்ததாகவும், உறுதியான தாகவும், கிழட்டுத்தனம் அடையாததாகவும், தருணா வஸ்தை இல்லாததாகவும், கோணல் இல்லாததாகவும், காயம் படாதவையாகவுமாக தேர்வுசெய்ய வேண்டும். மேலும் புண்ணிய பூமி, மலை, வனம், நதிக்கரை ஆகிய இடங்களில் உள்ள மரங்களாகவும், பார்ப்பதற்கு அழகானதும், அனைத்து வகையான நன்மைகளை அளிக்கத் தக்கதாகவும் அந்த மரங்கள் அமைந்திருப்பது விசேஷம்.
இனிய ஒசையை எழுப்பும் தன்மையுடைய ஒலித் திறன் கொண்ட மரங்கள், ஒரே நிறமுள்ள மரங்கள், தொட்டுப் பயன்படுத்தும் நிலையில் தீங்கு இல்லாத மரங்கள், கிழக்கு மற்றும் வடக்கில் சாய்ந்துசெல்லும் கிளைகள் கொண்ட மரங்களை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதால், சுபிட்சம் உண்டாகும், என்பது மயன் கருத்து.
மரங்களைத் தேர்வு செய்யும்போது…
1. கோயிலின் உட்பகுதியில் வளர்ந்த மரங்கள்
2. இடி விழுந்த மரங்கள்
3. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள்
4. வீடுகளில் வளர்ந்த மரங்கள்
5. ராஜ வழிகளாகிய மகா பதங்களில் வளர்ந்துள்ள மரங்கள்
6. கிராமங்களாகிய குடியிருப்புகளில் பராமரித்து வளர்க்கப்பட்ட மரங்கள்
7. நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட மரங்கள்
8. பெரும் காற்றில் சாய்ந்த மரங்கள்
9. யானை போன்ற விலங்குகளினால் சாய்க்கப் பட்ட மரங்கள்
10. பறவைகள், விலங்கினங்கள் தங்கிய மரங்கள்
11. சண்டாளர்கள் வசிக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள்
12. மனிதர்களுக்கு நிழல் தரவும், ஓய்வெடுக்கவும் பயன்படும் மரங்கள்.
13. ஒன்றோடு ஒன்றாக பின்னி வளர்ந்த மரங்கள்
14. நெருக்கமாக வளர்ந்த மரங்கள்
15. கொடிகளால் சூழப்பட்ட மரங்கள்
16. நரம்புகள் தெரியும் வண்ணம் வளர்ந்த மரங்கள்
17. பொந்துகள் உள்ள மரங்கள்
18. கணுக்கள் அதிகம் உடைய மரங்கள்
19. பூச்சிகள் அரித்த மரங்கள்
20. அகாலத்தில் பலன் தரும் மரங்கள்
21. சுடுகாட்டில் உள்ள மரங்கள்
22. ஊர் சபை கூடும் இடங்களில் உள்ள மரங்கள்
23. நான்கு வீதிகள் கூடும் இடங்களில் வளர்ந்துள்ள மரங்கள்
24. கோயில் மரங்கள்
25. குட்டைகளில், குளக் கரை, கிணற்றின் அருகில் வளர்ந்த மரங்கள்
26. பாழ்பட்டு கிடக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள்

இவ்வகை மரங்களைத் தவிர்க்கவேண்டும்.
வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்?!
கட்டுமானத்துக்கு மரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் குறித்தும் சில விளக்கங்கள் உண்டு.
பருத்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி, எருக்கு, புளி, இலவு மரங்களை இல்லத்தில் வளர்த்தால் அஷ்ட லட்சுமியும் இடம் பெயர்வர். அத்தி, ஆல், இச்சி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, மகிழம், விளா மரங்கள் பயன்படுத்தினால் செல்வம் அழியும், ஆயுள் குறைவு ஏற்படும்.
உங்கள் வீட்டு அறைகள் எப்படி?
பூஜையறை: வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.
அந்த இடத்தில் வேறு அறைகள் அமைக்கக் கூடாது. அப்படி வேறு அறைகள் அமைந்து அதில் எவரேனும் தங்கினால், அப்படியானவர்களுக்கு சோம்பல் குணம் மிகுதியாகும். தங்குபவர்கள் சிறுவர்களாக இருந்தால், படிப்பில் தடை ஏற்படும்.

குளியல் அறை: பொதுவாக வீட்டில் பயன்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டத்தை அமைப்பார்கள். அதற்கேற்ப வீட்டின் குளியலறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நல்லது. கிழக்கில் குளியலறை அமையும் பட்சத்தில், குளித்ததும் வழிபாடு செய்ய முற்படும்போது, ஆரோக்கியம் தரும் தெய்வமான சூரியதேவனை வழிபட ஏதுவாக  இருக்கும். இதற்கு வழியில்லாதபோது, மற்ற திசைகளில் குளியலறையையும், தண்ணீர் வெளியேறும் வழிகளையும் அமைக்கலாம்.
சமையல் அறை: ஒவ்வொரு மனிதருக்கும் மிக அத்தியாவசியமானது உணவு. அதைத் தயார் செய்வதற்கு அக்னி அவசியம். இறை வழிபாட்டில் மந்திரங்களைச் சொல்லியபடி அக்னியில் பொருள்களைச் சமர்ப்பிப்பது உண்டு. அதாவது, இருதயத்தை பலிபீடமாகவும், ஆத்மாவை அக்னியாகவும் பாவித்து தன்னையே தியாகம் செய்ய வேண்டும் எனும் கருத்துடன் அமைந்த சடங்கு முறை இது. இதிலிருந்து அக்னியின் முக்கியத்துவத்தை அறியலாம். சமையலுக்கும் அக்னியே பிரதானம்.  அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. எனவேதான், தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைத்துக் கொள்வது சிறப்பு.
படிக்கும் அறை: வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென் மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது. ஜோதிட விதிப்படி புதன் கிரகத்தை வித்யாகாரகன் என்று சொல்வார்கள். ஆக, படிக்கும் அறையானது புதனுக்கு உரிய திசையில் அமைவது விசேஷம். அல்லது, ஞானகாரகனாகிய குருவுக்கு உரிய திசையில் அமைக்கலாம். புதனுக்கு உரிய திசை வடக்கு; குருவுக்கு உரியது வடகிழக்கு. இந்த திசைகளை நோக்கியபடி படிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
படுக்கை அறை: பொதுவாக, சராசரி மனிதர் ஒருவர் நாளின் 24 மணி நேரத்தில், 8 மணி நேரம் அலுவல்களிலும், 8 மணி நேரம் வெளியிடங்களிலும், 8 மணி நேரம் வீட்டிலும் இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் செயல்பட நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். அது கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.
வீட்டின் பாகங்களும் பயன்களும்!
வீட்டின் ஈசான்ய பாகமானது (வடகிழக்கு பாகம்) பூஜை செய்வதற்கு உரிய இடம். மேலும், நெல் முதலான தானியங்களைச் சேமித்துவைக்கவும் உகந்தது. தலைவன் தலைவி படுக்கை அமைய, நன்மை விளையும்.
* வீட்டின் தென்கிழக்குப் பகுதியை சமையல் செய்யவும், வீடு தேடி வரும் உறவினர் தங்கவும் பயன்படுத்தலாம். இந்த இடத்தில் படுக்கை அமைவது கூடாது; மீறினால் குழந்தை துர்க்குணத்துடன் பிறக்கும். வீட்டுத் தலைவருக்கு பொருள் சேதம் உண்டாகும்.
* வீட்டின் தெற்கு பாகம் பூஜையறை, உணவு உண்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும் உரிய இடமாகும். இங்கு படுக்கை அமைந்தால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கும்; வம்ச விருத்திக்கு கெடுதல் உண்டாகும்.
* தென் மேற்குப் பகுதியில் பாத்திரங்கள், உயர்ந்த பொருட்கள் வைப்பதற்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் ஏற்ற இடமாகும். இங்கும் படுக்கையறை அமையக்கூடாது.
* வீட்டின் மேற்குப் பகுதி தம்பதி சேர்க்கைக்கு உகந்த இடம். பிறக்கும் குழந்தை ஆணானால், மெய்ஞ்ஞானியாகத் திகழ்வான். பெண் குழந்தை எனில், சிறந்த குணவதியாகத் திகழ்வாள்.
* வீட்டின் வாயு மூலையில் பூஜை அறை அமைக்கலாம். முற்காலத்தில் இந்தப் பகுதியை பிரசவத்துக்கான இடமாகத் தேர்வு செய்வார்கள் (முன்பு வீட்டிலேயே பிரசவம் நிகழும்). இந்த இடத்தில் நெற்களஞ்சியம் வைப்பதால் லாபம் ஏற்படும்.
கதவுகளும் பலன்களும்!
ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே? அந்தக் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக் கொள்ளுமானால், துன்பகரமான சம்பவங்களே நிகழும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சப்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. கதவை மூடும்போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், புத்திரபாக்கியக் குறையும், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவும், மனக் கவலைகளும் ஏற்படும்.
கதவுகளின் எண்ணிக்கை!
இரண்டு கதவுகள்: நல்ல பலனைத் தரும்.
3 கதவுகள்: பகைமை ஏற்படும்.
4 கதவுகள்: நீண்ட ஆயுள் உண்டாகும்.
5 கதவுகள்: நோயை உண்டாக்கும்.
6 கதவுகள்: சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.
7 கதவுகள்: மரண பயத்தை ஏற்படுத்தும்.
8 கதவுகள்: செல்வம் வளரும்.
9 கதவுகள்: நோய் உண்டாகும்.
10 கதவுகள்: திருடர்களால் ஆபத்து.
11 கதவுகள்: நன்மைகள் குறைவாக இருக்கும்.
12 கதவுகள்: வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
14 கதவுகள்: செல்வ வளர்ச்சி இருக்கும்.
15 கதவுகள்: நன்மை குறைவு.
பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.
உங்கள் ராசியும் வீடும்!
ஒவ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு. மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கியும், ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள் தெற்கு நோக்கியும், மிதுனம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கியும், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கியும் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக வாழலாம்.
அதேபோல், 12 ராசிக்காரர்களும் தங்களது வீடுகளை ஊரின் எந்த பாகத்தில் அமைக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டலும் உண்டு.
மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது
ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது
கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.
கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.
துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.
விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.
தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.
கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.
மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.
தற்காலத்தில் இந்த நியதிகள் யாவும் பொருந்தும்படி வீடுகள் கிடைப்பது வெகு அபூர்வம்தான். எனினும், இயன்றவரையிலும் மேற்சொன்ன நியதிகளைக் கவனத்தில் கொண்டு வீடு கட்டி, குடிபுகுந்து சிறப்பான வாழ்க்கையைப் பெறுவோம்.
வளம் தரும் வாஸ்து பூஜை!
பூமி மற்றும் ஆகாயவெளியில் வெளிப்படும் பல்வேறு சக்திகள் ஒரே சீராகக் கிடைப்பது இல்லை. விண்வெளியில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களில் இருந்து வெளிப்படும் சக்திகளின் மாற்றங்கள் பல நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றில் நல்ல விளைவுகளுக்கான சக்திகளைக் கிரகித்து, சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்கு நம் முன்னோர்களும், குருமார்களும், மகான்களும் பல வழிகளைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது வாஸ்து வழிபாடு.
எந்த தினங்களில் பூஜிக்கலாம்?: வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்பூஜைக்குத் தேவையானவை: பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், விபூதி, ஊதுவத்தி,  நவரத்தினங்கள் (உரிய கடைகளில் கிடைக்கும்), பஞ்ச லோகங்கள், நவதானியங்கள்.
எப்படி பூஜிப்பது?: முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும் பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில் (அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும். அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.
பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதாரத் துதித்தபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர் எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.
அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும் கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து, நவகிரகங்களின் திருவருளைப் பெறும்பொருட்டு,  சூரியதேவனே போற்றி, சந்திரனே போற்றி என்று துவங்கி நவகிரகங்களையும் போற்றி கூறி வழிபட்டு நவதானியங்களையும், நவரத்தினங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து வழிபடவேண்டும். நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும். இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம். இந்த முறை எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய முறையாகும்.

Friday, October 7, 2016

காலை உணவைத் தவிர்த்தால் எடை குறையுமா?

4-ல் ஒருவர் இந்தியாவில் காலை உணவைத் தவிர்க்கின்றார்.
30 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினரில் மூன்றில் ஒருவர் காலை உணவைத் தவிர்க்கின்றார்.
72% மக்கள் ஊட்டச்சத்து குறைவான காலை உணவையே எடுத்துக்கொள்கின்றனர். இதில் பெண்கள்தான் அதிகம்.

30 கோடி மக்கள் இந்தியாவில் காலை உணவு சாப்பிடுவதில்லை.
20-30% பள்ளி செல்லும் குழந்தைகள் காலை உணவு உண்பதில்லை
மீபத்திய இந்த சர்வே, காலை உணவில் மக்களின் போதிய அக்கறை யின்மையையே காட்டுகிறது.
இதுபோலவே, நம் மக்களின் காலை உணவு குறித்த விகடன் ஆன்லைன் சர்வே முடிவுகளும் அதிர்ச்சியையே தருகின்றன. சர்வே முடிவில், 39% பேர் மட்டுமே காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறார்கள். காலை உணவைச் சாப்பிட நேரமில்லை என 36% பேரும், காரணம் சொல்லத் தெரியவில்லை 34% பேரும், 10 நிமிடத்துக்கும் குறைவான நேரத்திலேயே காலை உணவு சாப்பிடுவதாக 56% பேரும் தெரிவித்துள்ளனர். பொதுவாக நாம் அனைவரும் மூன்று வேளைகள் உணவு சாப்பிட்டாலும், நம் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றலை கணிசமான அளவுக்குக் கொடுப்பவை காலை உணவுதான். அதை ஏதோ ஒரு நாள் தவிர்த்தால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் தவிர்ப்பதால் வரக்கூடிய பாதிப்புகள் ஏராளம் எனக் கூறும் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான உமா ராகவன், இது குறித்து விரிவாக விளக்குகிறார்.
‘‘பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டே ஆகணுமா’ என்ற கேள்வியை இளைய தலைமுறையினர் பலர் எழுப்புகின்றனர். ஆம் என்பதே மருத்துவ ரீதியான பதில். முன்பெல்லாம் பருமன், நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மன அழுத்தம் போன்றவை பெரும்பாலும் 50 வயது கடந்தவர்களுக்குத்தான் வரும். இப்போதோ 30 வயதிலேயே சர்வசாதாரணமாகி விட்டது. இந்தப் பிரச்னைகளுக்குப் பிரதான காரணம், உணவில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதுதான். குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதே.
குறிப்பாக காலை எழுந்ததில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட வேண்டும். முடியாத பட்சத்தில் பால்/காபி/டீ, சிறுதானிய பிஸ்கட், முஸ்லி ஃப்ளேக்ஸ் என ஏதேனும் ஒன்றை சிறிதளவு எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் கழித்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம். அதைத் தொடர்ந்து மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமான உடல்நலனுக்கு உகந்தது.
ஒவ்வொரு வேளையிலும் பசிவரும் நேரத்தில் சாப்பிடாத பட்சத்தில், உடலானது ஏற்கனவே உள்ளிருக்கும் சத்துகளை எடுத்துக்கொண்டு எனர்ஜியை உற்பத்தி செய்யும். அப்படி நடப்பதால்தான் அசிடிட்டி, GERD எனப்படும் ஜீரணக் கோளாறு, அல்சர் போன்ற பிரச்னைகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படலாம்.
காலையில் சாப்பிடாமல் மதியம் அல்லது இடைவேளை நேரத்தில் சாப்பிடும்போது, அந்த நேரத்தில் ஏற்படும் பசிக்கு மட்டுமே சாப்பிடுவதில்லை. அதிக அளவில் கன்னாபின்னாவெனச் சாப்பிடுவதால் (binge eating), அப்போதைய தேவைக்கு மீறிய சத்துகள் கொழுப்பாக மாறும். இதே நிலை தொடர்ந்தால் பருமன் அதிகமாகும்.
காலையில் சாப்பிடாததால் ஏற்படும் பிரச்னைகள்
காலை உணவை முற்றிலுமாகத் தவிர்த்தல், போதிய சத்தில்லாத காலை உணவைச் சாப்பிடுவது போன்ற செயல்களால், அப்போதே எனர்ஜி குறையும். அதற்கடுத்த வேளைகளில் சத்தான உணவு களைச் சாப்பிட்டாலும்கூட அவற் றின் முழுப்பயனும் உடலுக்குக் கிடைக்காது. இதை improper metabolism என்போம். இதனால் மூட்டுவலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிக அளவில் வரும். இதுபோன்ற காரணங்களால்தான், 35 வயது தாண்டிய மேலானதுமே பலரும் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நம் உடலுக்கு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையிலும் தேவையான எனர்ஜி, பசி உணர்வின் மூலமாக நமக்குத் தெரியப்படுத்தப்படும். அப்போது உடலின் எனர்ஜி லெவல் குறைந்து ஜீரோவை அடையும். பசிக்கு ஏற்ப சரியான அளவில் சாப்பிட்டுவிட்டால், போதுமான ஆற்றல் கிடைத்து, அது பாசிட்டிவ் எனர்ஜி பேலன்ஸாக மாறி, உடலின் அடுத்தடுத்த‌ செயல்பாடுகள் சரியாக நிகழும்். சாப்பிடாமல் காலதாமதம் செய்தாலோ, எனர்ஜி லெவல் இன்னும் குறைய ஆரம்பிக்கும். அந்த நிலை தொடரும்போது, உடலுக்குள்ளேயே இருக்கும் பழைய சத்துகளைப் பயன்படுத்தி உடலின் அடுத்தடுத்த ரியாக்‌ஷன்கள் நடக்கும். இது நெகட்டிவ் எனர்ஜி பேலன்ஸ் எனப்படும். இது மிகவும் அதிகமானால் மயக்கம், சோர்வு, குறை ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ருமனாக  இருப்பவர்கள், சாப்பிடுவதை கைவிட்டாலே  காலையில் எடை குறையும் என நினைப்பார்கள். அது உண்மை யல்ல… பசிக்கு ஏற்ப சாப்பிட்டு, அவற்றைக் கரைக்கும் அளவுக்கு வேலை செய்தாலே தேவையற்ற பருமன் ஏற்படாது.
  காலை உணவைத் தவிர்க்கும் மாணவர்களுக்கு கவனச்சிதறல், சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, பிரதான வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போகும்.
ரவுப்பணிக்குச் செல்பவர் களில் பலர் காலையில் வீடு திரும்பியதும் உடனே படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனாலும் உடலின் எனர்ஜி லெவல் குறையும். உடல்நலம் பாதிக்கப்படும். இவர்களைப் பொறுத்தவரை காலை உணவே டின்னர். அதற்குப் பிறகு தூங்குவதுதான் இரவுத் துயில். மீண்டும் எழுந்து சாப்பிடுவதுதான் பிரேக்ஃபாஸ்ட். எனவே, காலையில் எழுந்து வேலைக்குச் செல்பவர்கள் கடைப்பிடிக்கும் அனைத்து உணவுப் பழக்கவழக்கங்களையும் இவர்களும் தவறாமல் செய்ய வேண்டும். ஒரே வித்தியாசம், பகல்-இரவு மாறுபாடு மட்டுமே!
ஸ்கிம்ப்பிங் (skimping)…  இது முழுமையாகச் சாப்பிடாமல் அரைகுறையாகச் சாப்பிடு வதால் முழுமையான சத்துகள் கிடைக்காத நிலை. அதனால்தான் பிரேக்ஃபாஸ்டிலேயே தேவையான சத்துகள் கிடைக்கும் வகையில் நல்ல உணவு சாப்பிடும்படி அறிவுறுத்தப்படுகிறது.
தொடர்ந்து சில நாட்களுக்கு சரியாக காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அடுத்த சில நாட்களிலேயே அசிடிட்டி பிரச்னை உருவாகும்.
பசிக்காமல் இருப்பது ஏன்?
முந்தைய தலைமுறையிலும், இன்றைய கிராமப்புறங்களிலும் இரவு 8 மணிக்குச் சாப்பிட்டு, 9 மணிக்குத் தூங்கி, காலை 5-6 மணிக்குள் எழுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நன்றாகப் பசிக்கும். சரியாகச் சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக இருப்பார்கள். இன்றைக்கு செல்போனும் சோசியல் மீடியாக்களும் பலரது சாப்பாடு, தூக்கத்தை மறக்கச் செய்துவிட்டன. இரவுச் சாப்பாடு 10 மணிக்கு, இரவுத் தூக்கம் 12 மணிக்கு, காலை எழுவது 8 மணிக்கு என்ற அட்டவணையைப் பின்பற்றுகின்றனர். இதனால் காலையில் நேரமில்லை எனச் சொல்லி, சாப்பிடாமலே செல்வார்கள். இதைத் தொடர்ந்து மதிய உணவு, இரவு உணவு சாப்பிடும் நேரமும் அளவும் மாறுபடும்.
இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதாலும் காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். பசி உணர்வே இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும். இதுபோன்ற உணவுகளை மதியம் சாப்பிட்டால், இரவில் பசி உணர்வு பாதிக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பலர் பெரும்பாலும் உடல் உழைப்பைக் கொடுக்காததால், துரித உணவுகள் கொழுப்பாக மாறி, பருமன் அதிகமாகக் காரணமாகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால், மூன்றாவது நாள் இயல்பாகவே பசி எடுக்காது. ‘பசி இல்லை’ என்பார்கள். பசி ஏற்படாததற்கும் நாம்தான் காரணம் என்பதையும் மறக்கிறோம். பசி இல்லாவிட்டாலும், இரண்டு நாட்களுக்கு காலையில் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பாருங்கள். அடுத்த நாள் ஆட்டோமேட்டிக்காக பசி எடுக்கும்!
காலை உணவு பெண்களுக்கு ஏன் அவசி யம்? காலை உணவில் சேர்க்க வேண்டியவை எவை? தவிர்க்க வேண்டியவை எவை? அடுத்த இதழில் அறிவோம்!

உணவு நேரம்!

* காலையில் எழுந்த 2 மணி நேரத்தில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து முறையே 2 1/2 மணி நேர இடைவெளி விட்டு ஸ்நாக்ஸ், மதிய உணவு, ஸ்நாக்ஸ் எனச் சாப்பிடலாம்.
* இரவு தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பே டின்னரை முடித்துவிட வேண்டும். உறங்குவதற்கு முன் பத்து நிமிடம் வீட்டுக்குள்ளேயே மெதுவான நடைப்பயிற்சி செய்வது சிறந்தது. இதனால் காலை பசி உணர்வு சரியாக இருக்கும்.

Thursday, October 6, 2016

உடலை கட்டுப்படுத்த உதவும் விசித்திரமான 14 பாடி ஹேக்ஸ்!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.

நமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி என இனி காணலாம்….
ஆழ்ந்த தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள், உறங்க வேண்டி படுத்த பிறகு, உங்க இமைகளை வேகமாக இமைத்தால் ஒருசில நிமிடத்தில் உறக்கம் வந்துவிடும்.

குளித்து முடிக்கும் போது, ஷவரில் குளிர் நீரை திருப்பிவிடுங்கள். இந்த குளிர்ந்த நீர், சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மூடிவிடும். இதனால் பாக்டீரியா, அழுக்கு சேர்வதை தடுத்து, பருக்கள் அதிகரிக்காமல் காக்கலாம்.

சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும் போது, அருகே பாத்ரூமும் இல்லை என்றால், உடலுறவு பற்றி என்ன துவங்குங்கள். உங்கள் மூளையை திசைத்திருப்பி, சற்று நேரம் சிறுநீர் அவசரத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

உறங்க செல்வதற்கு முன்னர் நீங்கள் படிக்கும் விஷயம், அதிகாலையில் அதிகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.

உங்கள் நாக்கை பற்களின் பின் புறம் உறுதியாக வைப்பதால், தும்மலை தடுக்க முடியும்.

படுத்த பிறகும் உறக்கம் இல்லாமல், மயக்க நிலையில் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒருகாலை மட்டும் தரையில் படுபடி வையுங்கள். நல்ல உறக்கம் வரும்.

ஒற்றை தலைவலி இருந்தால், உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் வையுங்கள். இது, ஒற்றை தலைவலி குணமாக செய்யும்.

கொசு கடித்த இடத்தில் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருக்கிறதா? கொசு கடித்த இடத்தில் டியோடிரன்ட் தடவினால், அரிப்பை தடுக்க முடியும்.

முக்கியமாக வேலை செய்துக் கொண்டிருக்கும் போது தூங்கி, தூங்கி விளுகிரீர்களா? நன்கு மூச்சை இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை அடிக்கி , வெளிவிடுங்கள். தூக்கத்தை தடுக்க முடியும்.

அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களா? உங்களை நீங்களே கிள்ளி கொள்ளுங்கள். சிரிப்பு நின்றுவிடும்.

மிகுந்த சோகத்தில் இருக்கும் நேரத்தில், அதை எழுதி வையிங்கள். சோகம் குறைந்து, இலகுவாக உணர்வீர்கள்.

மிகுந்த மூக்கடைப்பு இருந்தால், உறங்கும் போது அருகே ஒரு வெங்காயம் வைத்துக் கொண்டு உறங்குங்கள். காலை மூக்கடைப்பு சரியாகிவிடும்.

தொண்டையில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறதா? உங்கள் காதை இதமாக தேய்த்துக் கொடுங்கள், இந்த உணர்வு நின்றுவிடும்.

அழுகையை அடக்க வேண்டுமா? உங்கள் கண்களை அகல விரித்து, இமைக்காமல் வைத்திருங்கள் அழுகை நின்று விடும்