Wednesday, September 28, 2016

இதயநோய்கள் TOP 10 தவறுகள்!

ங்கள் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஏந்த ஒரு பொய்யையும் கூட மிக எளிதாக நம்ப வைக்க முடியும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பல்வேறு தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் இதயம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. வயதானவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள

உணவு மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்குத்தான் இதய நோய்கள் வரும் என்று பல்வேறு விஷயங்கள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இதயநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்… அது மிகவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்பவராக இருந்தாலும் சரி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இதய நோய்கள் தொடர்பாக இருக்கின்றன. இவற்றில் எவை எல்லாம் உண்மை என, வாங்க பார்க்கலாம்!
1. இளம் வயதுதான் ஆகிறது. இதயநோய் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.

உண்மை:
இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அல்லது இளமைப் பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்ல… இளம் மற்றும் நடுத்தர வயதினர் கூட இதய நோய் பாதிப்பு காரணமாக வருகின்றனர். உடல்பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

2 மாரடைப்பு வந்தால் நெஞ்சில் ஏற்படும் வலியைக் கொண்டே கண்டறிந்துவிடலாம்.


உண்மை:
வலி வரும் என்று இல்லை. பொதுவாக மாரடைப்பு வருகிறது என்றால், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது, சுவாசித்தலில் சிரமம், வாந்தி, தலைபாரம் மற்றும் வலி, ஒரு கை அல்லது இரண்டு கைகளிலும் அசௌகரியம், கழுத்து, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. எனவே, லேசாக இந்த அறிகுறிகள் தென்பட்டாலே அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு விரைவது அல்லது 108ஐ அழைத்து தெரிவிப்பது நல்லது.
3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மருந்தை எடுப்பதால், எதை வேண்டுமானலும் சாப்பிடலாம்.

உண்மை:
நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதியை நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது.  ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாகவும் கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்த பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.
4. வயதாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். இதனால் பிரச்னை இல்லை.

உண்மை:
நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ரப்பர் டியூப்புடன் ஒப்பிடலாம். நாளாக நாளாக அந்த டியூப் எப்படி தன் உறுதித்தன்மையையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்கிறதோ அதுபோலத்தான் நம் ரத்த நாளங்களும் உள்ளன. வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

5. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தாலேபோதும், இதய நோய் வராது.
உண்மை: சர்க்கரை நோய்க்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது, சிறிய ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நுண் ரத்த நாளப் பிரச்னைகளான (Micorvascular complications) சிறுநீரகப் பாதிப்புகள், பார்வை இழப்பு, நரம்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்ற இதர காரணங்களாலும், ரத்த நாளங்கள் வீக்கமுறுவதாலும் (Inflamation) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். எனவே, டயாபடீஸை கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.
6. வைட்டமின்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள் வராது.
உண்மை: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் கார்டியோவாஸ்குலர் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உணவின் மூலமாக வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதே சிறந்த வழி. இதற்கான காரணங்களை முழுமையாக அறியமுடியவில்லை என்றாலும், இதயத்தைப் பலப்படுத்தும் வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்வது நல்லது. வானவில் நிறங்களில் உள்ள ஏழு வகை காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் இயற்கையான முறையில் அனைத்து வைட்டமின்களும் தாதுஉப்புக்களும் கிடைத்துவிடும்.
7. பல ஆண்டுளாக உள்ள சிகரெட் பழக்கத்தை திடீரென்று நிறுத்துவதால் இதயநோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியாது.

உண்மை:
புகைபிடிப்பதை நிறுத்திய விநாடியில் இருந்தே அதன் பலன்கள் உடலுக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. எத்தனை வருடங்கள், எத்தனை நாட்கள் புகைபிடித்தீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருப்பதால், இதய நோய்களுக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள். இதுவே, 10 ஆண்டுகளாகப் புகைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு புகைப்பழக்கம் இல்லாதவர்களின் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமோ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, இப்போதே இந்தக் கணமே புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது.
8. இதய நோய்கள் ஆண்களுக்குத்தான் வரும்; பெண்களுக்கு ஏற்படாது.
உண்மை: 1984 வரை உலகில் பெண்களே இதய நோய்களால் அதிகமாக இறந்துகொண்டிருந்தார்கள் என்றால், நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். 55 வயதுக்கு மேல், 70 சதவிகித ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய ரத்தநாள பிரச்னைகள், இதய செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 80 வயதில் 83 சதவிகித ஆண்களுக்கும் 87 சதவிகிதப் பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. மெனோபாஸஸுக்குப் பிறகு, அந்த பாதுகாப்பு அவர்களைவிட்டு போய்விடுகிறது. எனவே, நீங்கள் ஆணோ பெண்ணோ, 50 வயதைக் கடந்தவர் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும், கொலஸ்ட்ரால் பரிசோதனையும் செய்துவருவது நல்லது.
9. இதய நோய் இருந்தால் கொழுப்பையே சாப்பிடக் கூடாது.

உண்மை:
இதய நோய் இருப்பவர்கள் நிறைவுற்ற கொழுப்பையும், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பையும், டிரான்ஸ் ஃபேட்டையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களும் எண்ணெய்களும் போதுமான அளவு சாப்பிடலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த எண்ணெய் மீன்கள், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
10. சிறிய மாரடைப்பு என்பது பெரிய ஆபத்து அல்ல.
உண்மை: அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதே முக்கியம். முதல் அட்டாக் வரும்போது சிலருக்கு மாரடைப்பு வந்ததைக்கூட உணர முடியாது. ஆனால், ஒருமுறை அட்டாக் ஏற்படுவது என்பது, உங்களுக்கான எச்சரிக்கை மணி! அடுத்த அட்டாக் உயிரைப் பறிக்கும் எமனாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சரியான எடையைப் பராமரிப்பது, அளவான கொழுப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது என இதய நோய்களைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். மைல்டு அட்டாக்தானே என்று அசட்டையாக இருப்பது, மரணத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

உலக இதய நாள்

செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்!
நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின்  மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இதயத்தைக் காப்பாற்ற முடியும். நம் இதயம் எனும் இயற்கையான பேட்டரிக்கு இந்த அழகான எண்ணங்களைச் செயலாக்குவதன் மூலம் சார்ஜ் ஏற்றுவோம். இதயம் காப்போம்… உயிர் காப்போம்!

Saturday, September 24, 2016

கனவுகளும் பலன்களும்!

சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது?‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி

னவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின்

மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும்.
கனவுகள் குறித்து தேவகுருவான பிரகஸ்பதி பகவானும் விளக்கியுள்ளதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. ப்ரச்ன மார்க்கமும் கனவுகள் பற்றி குறிப்பிடுகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவு கள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது.
கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும்.
இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும்; மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும்; விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு வரும் கனவுகளைப் பற்றி நமது முன்னோர் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதித் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து அபூர்வமான தகவல்கள், உங்களுக்காக! அகர வரிசைப்படி  ஒவ்வொன்றாய் அறிவோமா?
அதிர்ஷ்டம் தரும் கனவு!
அரசர்: அரசர் (தற்போது ஜனாதிபதி, பிரதமர்) போன்ற பெரும்பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண் மேற்படி கனவைக் கண்டால், அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆடவன், அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.

அப்சர ஸ்திரீகள்: தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். திருமணமாகாத மகளிர் கண்டால், விரைவில் திருமணம் நிகழும். மணமான மங்கையர் கண்டால், பொருள் வரவு உண்டு.
அழகற்ற பெண்: அழகு இல்லாத பெண் ஒருத்தியை, மணமாகாத ஓர் ஆடவன் கனவில் கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். மிகவும் அழகான பெண் மனைவியாவாள்.
அதிசயமானவர்: விந்தையான மனிதர் அல்லது நூதனப் பொருட்கள் கனவில் வந்தால், வரும் தீமையைச் சுட்டிக்காட்டும். நம்பிக்கை மோசடி – ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
அடிதடி: சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு கண்டால், அவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும்.
சண்டையில், பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இல்லை எனலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து நண்பர்களாக மாறுவார்கள். தான் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை உருவாகும். புதிய நண்பர்கள் உண்டாவர், புகழ் பெருகும். தான் அடிபட்டு காயமடைந்ததாகக் கனவு கண்டால், பொருள் அபிவிருத்தி ஏற்படக்கூடும் எனலாம். ஆனால், கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நல்லதல்ல; பழி ஏதேனும் வந்து சேரும்.
அழுகை: வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு காணின் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும்.
அபாயம்: தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். பிறர் அபாயத்தில் சிக்கியிருப்பதுபோல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும்.
அரிசி: அரிசியைக் கனவில் கண்டாலோ, சந்தையில் வாங்கி வருவதுபோல் கனவு கண்டாலோ செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்.
அன்னப் பறவை: கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது சிலாக்கியம் என்று கூறுவதற்கில்லை.
பருவ வயதில் உள்ள ஓர் இளைஞனின் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், பெரும் ஏமாற்றங்களுக்கு அவன் ஆளாக வேண்டியிருக்கும். அவனுடைய தன்மானத்துக்கு இழுக்கும் அபவாதமும் சூழும்.

மணமாகாத மங்கை ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னத்தைக் கண்டால், உடனடியாக ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடும். ஆனால், வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ஆலயம் கனவில் வந்தால்…
ஆசிரியர்: கல்வி போதிக்கும் ஆசிரியப் பெருமக்களில் ஒருவரை கனவில் சந்திப்பவரின் வாழ்க்கை வளங்கள் அமோகமாகப் பெருகிடும். பொருள் வரவும் மிகுதியாகும்.
ஆலயம்: கோயிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும். புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். ஆனால், பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் காண்பது கூடாது. முன்னதற்கு நேர்மாறான பலன்களைத் தரும். முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும் பொருள் நஷ்டமும் உண்டாகும்.
ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும்  செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும். ஆனாலும் தெய்வத்தின் அருளால் முடிவில் செயல் நன்மை யாகவே முடியும்.கனவில், ஆலய மணியோசை யைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் பலன் உண்டு. ஆலய மணியோசை ஒரே சீராக ஒலிக்கும் எனில், மக்கள் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும். ஆனால், மணியோசை சீரற்றதாக ஒலிக்குமானால் பல சிக்கல்கள் குறுக்கிடுவதோடு பொருள் நஷ்டமும் உண்டாகும்.
ஆலமரம்: கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.
ஆசியுரை: தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.
ஆரஞ்சு: கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடல் காயம் உண்டாகலாம். வீண் பழி சுமத்தப்பட்டு பெயர் கெடவும் கூடும்.
இனிப்பும் இரும்பும்!
இஞ்சி: கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இனிப்பு: இனிப்பான பலகாரங் களைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
இளைப்பு: தான் இளைத்து விட்டதுபோல் ஒருவர் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும்.
இறந்தவர்கள்: இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு காணின், பெயரும் மேலான புகழும் பெறும் நிலை ஏற்படும்.
இறந்துபோன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு அண்மையில் வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்பது பொருள். தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமாகில், நன்மைகளையே குறிப்பிடும் எனலாம். சுக வாழ்க்கை ஸித்திக்கும். எனவே அச்சமுற வேண்டாம். உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு காண்பது, அவருடைய துன்பங்கள் நீங்கும் என்பதைக் குறிப்பிடும்.
நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு காண்பவனுக்கு, வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.
குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வரவிருக் கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். இறந்துபோன மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், வாழ்க்கை நிம்மதியாக அமையும். மாறாக, அவள் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகும்.
இரும்பு: இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை மிகுந்திருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நிவர்த்தியாகும். வேறு சிலருக்கோ, தரித்திரத்தை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு எடுப்பதுபோல் காண்பது மிகவும் கெடுதலானது.
ஈன்ற பசுவை கனவில் காணலாமா?
ஈன்ற பசு: பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.     
உணவும் கனவும்!
உத்தியோகம்: ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கு அறிகுறி. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதுபோல் கனவு கண்டால், அவ்வாறே செயலில் நிகழவும் கூடும். இல்லையேல், ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து,  மேலிட விரோதத்தைச் சம்பாதிக்க நேரிடலாம்; வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.
உழவு: ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வதாக கனவு கண்டால், அவரது வாழ்க்கை வளம் அனைத்தையும் பெற்றுத் திகழும்.
உற்ஸவம்: தேரோட்டம் போன்ற திருவிழாக்களைக் கனவில் காணின், உடனடியாக உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடும்.
உண்ணல்: தான் மட்டும் தனித்து உண்பதுபோல் கனவு காணின் துன்பங்கள் உண்டாகும். உறவினர்களைப் பிரிய நேரிடும். தொழில் நஷ்டம் ஏற்படும்.
அவ்வாறு கனவு காண்பவர் விவசாயியாக இருப்பின் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும்.பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், உத்தியோக உயர்வு ஸித்திக்கும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள், விருந்துண்டு மகிழ்வ தாகக் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஊற்று… உன்னதம்!
ஊற்று: கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது கஷ்டங்களைக் குறிப்பிடும்.
எலும்பும் எழுத்தும்!
எதிரிகள்: கனவில் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும்.
எலும்பு: கனவில் எலும்பைக் காண்பது விசேஷம். சதைத்திரள் ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தராகக் கூடும். மனிதரின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும்.
எழுத்தாணி: எழுதப் பயன்படும் பேனா போன்ற பொருள்களைக் கனவில் கண்டால், கடிதப் போக்குவரத்தால் பொருள் வரவு வரக்கூடும் என்று பொருள்.
எழுதுதல்: எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு காணின், நற்செய்திகள் விரைவில் அவரை நாடி வரும்.
எண்ணெய்: எண்ணெயை தனியா கவோ, அதை தேய்த்துக் குளிப்பதாகவோ கனவு காணக் கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால், நோயாளிகள் மேற்படி கனவைக் காணில், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும்.
ஏழ்மை நிலை: கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.
ஏமாற்றம்: ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால்,  தீமை உண்டாக வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி பொருள் இழக்க நேரிடும்.
ஏலக்காய்: கனவில் ஏலக்காயைக் காண்பவர், பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவார். ஏலக்காயை உண்பது போல கனவு காணின், திரண்ட செல்வம் வந்து சேரும்.
ஓட்டம்… உயர்வு!
ஒட்டடை: வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் நூலாம்படை அப்பியிருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்.
ஓட்டம்: தான் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதற்கு அறிகுறியாகும். தொழில் அபிவிருத்தியடையும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஸித்திக்கும்.
ஓசைகள்: கனவில் ஓசைகளைக் கேட்பது நல்லதல்ல. பேரோசையைக் கேட்பது, கள்வர்களால் பொருள் இழப்பு நேர்வதோடு, துன்பம் விளைவதையும் குறிக்கும். சிறிய ஓசையைக் கேட்பதுபோல் வரும் கனவு, வீண் சச்சரவுகள் ஏற்படுவதைக் குறிக்கும்.
ஹோம குண்டம்: கனவில் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் காண்பவர், தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் அடைவார்.
கஷ்ட காலம் இனி இல்லை!
கடல்: கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக ஸித்திக்கும். இல்லையேல், அயல் தேசத்தாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற தேச உறவுடைய அலுவலகங் களில் வேலை கிடைக்கும்.
கண்டங்கள்: ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கஷ்ட காலம்: கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, நேர்மாறான பலனைத் தரும். வாழ்க்கையில் உயர்வும் புகழும் ஸித்திக்கும்.
கற்பூரம்: கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம்.
கன்றுக்குட்டி: கன்றுக்குட்டியைக் கனவில் கண்டால், செல்வ சேமிப்பு ஏற்படும்.
கனவில் காய்கறிகள்!
காதணிகள்: கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
காய்கறி: காய்கறிகளைச் சமைப்பதுபோல கனவு காண்பது, நம்பியவர்களின் நம்பிக்கை மோசடியைச் சுட்டிக்காட்டும். காய்கறிகளை உண்பதுபோல கண்டால், பொருள் இழப்பு ஏற்படும். காய்கறிகளைப் பறிப்பதுபோல கனவு கண்டால், சண்டை – சச்சரவுகள் உண்டாகும்.
காக்கை: காக்கை கனவில் வருவது கெடுதலானது. தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு, விரோதிகளின் சூழ்ச்சி, வீண் விரோதம் போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். காகம் கரைவதாக கனவு காண்பதும் கெடுதலான காலத்தைக் குறிப்பிடும்.
கிணறு தரும் பலன்கள்
முதியவர்: முதியவர்களைக் கனவில் காண்பது நற்பலன்களை விளைவிக்கும். மிகுந்த செல்வம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தானே கிழவராகிவிட்டாற்போல ஒருவர் கனவு கண்டால், அவருடைய குடும்பநிலை மேம்படும்; சந்ததிகள் பெருகுவர்.
கிணறு: கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும். மணம் ஆனவர்களுடைய குடும்பத்தில், வேறு எவருக்கேனும் திருமணம் நடைபெறும். கிணற்றில் இறங்கி நீந்தும்போது, நீருக்கு மேலே தலையைத் தூக்கியிருப்பது போல கனவு கண்டால், முயற்சிகள் வெற்றி பெறும். மாறாக தலை தண்ணீரில் ஆழ்த்தப்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டாகும். கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதுபோல கனவு காண்பது, நினைத்த செயல்கள் இனிதே முடியும் என்று குறிப்பிடும்.
இப்படியான கனவை
வியாபாரி ஒருவர் கண்டால், அவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண் ஒருத்தி கண்டால், சகல செல்வங்களும் ஸித்திக்கும்.
கீழே விழுவது: கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்.
குடிசை தரும் எச்சரிக்கை!
குடுகுடுப்பைக்காரர்: கனவில் குடுகுடுப்பைக்காரர்களைக் கண்டால், ஆலோசிக்காமல் எக்காரியத்திலும் இறங்கக் கூடாது; எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை.
குடிசை: குடிசை ஒன்றில் தாம் வசிப்பதாகக் கனவு காணின், வறிய நிலையை அவர் அடைய நேரிடும் என்பதைக் குறிக்கும். குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு காணின், வீட்டில் களவு போகலாம்.
குண்டூசி: கனவில் குண்டூசி களைக் காணின், சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
குறட்டை: குறட்டை விடுவது போல கனவு கண்டால், சுக வாழ்க்கை ஸித்திக்கும்.
கூச்சல்: கூச்சல் ஒலிக்கும் இடத்தில் இருப்பதுபோல கனவு கண்டால் உடல் நலம் கெடும். பலர் கூச்சலிட்டு தன்னை நோக்கிப் பேசுவதாக காண்பதும் கெடுதலானது.
கூலி: கூலி வேலை செய்பவர், தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி குறைக்கப்பட்டது போல கனவு காணின், அவருக்கு தற்போதைய வேலையைவிட பெரிய வேலை கிடைக்கக்கூடும்.
கேலி: பிறர் நம்மை கேலி செய்வதுபோல கனவு கண்டால், தொழிலில் மேம்பாடு, உத்தியோகத்தில் உயர்வு, பொருள் சேர்க்கை உண்டாகும். மாறாக மற்றவர்களை, நாம் கேலி செய்வது போல கனவு கண்டால் பண நஷ்டம், உண்டாகும்.
கைவளையல்: கைவளையல் அணிந்திருப்பது போல் கனவு காணும் மங்கையர்களின் மணவிழா வெகுவிரைவில் நடைபெறும். மணமானவர்கள் எனில், அவர்தம் கணவருக்கு வருமானம்
அதிகரிக்கும். கைவளையலைக் கண்டெடுத்தாற் போல கனவு கண்டால், எதிர்பாரா வகையில் பெரும் சொத்து வந்து சேரும். ஆனால், வளையல் உடைத்து விட்டாற்போல காண்பது கெடுதல்.

கொய்யாமரம்: மரம் அல்லது பழத்தைக் காண்பது நல்லது. பழத்தை உண்பதுபோல காணின் நோய்கள் விலகும். தொழில் உயர்வு அடையும். உத்தியோக பதவியும் உயர்வடையும். இந்தக் கனவை விவசாயி ஒருவர் கண்டால், விளைச்சல் செழிக்கும். குழந்தைப் பேறு கிட்டாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணம் நடைபெறும்.
சந்தன மரம் சந்தோஷம் தருமா?
சமயத் தலைவர்கள்: இவர்களைத் தரிசிப்பது போலவோ, இவர்களுடைய உபதேசத்தைக் கேட்பது போலவோ கனவு கண்டால், தெய்வபக்தி மேலோங்கும், வருவாய் மிகுதியாகும்.
சந்திரன்: வானில் சந்திரன் பிரகாசிப்பதுபோல கனவு காணின், லாபங்கள் உண்டாகும். பலரும் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.
சந்நியாசம்: சந்நியாசம் மேற்கொள்வதுபோல காணும் கனவு, வர இருக்கும் இடையூறு களையும் இன்னல்களையும் குறிப்பிடும். ஆனால், முடிவில் யாவும் நிவர்த்தியாகி நிம்மதியுண்டாகும். ஆனாலும், இப்படியொரு கனவை மணம் ஆகாதவர்கள் கண்டால், அவர் இல்வாழ்வில் ஈடுபட மாட்டார் என்று கூறலாம்.
சந்தன மரம்: கனவில் சந்தன மரத்தைக் காண்பது நல்லது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்படும். உறவினர்களால் பொருள் உதவி கிடைக்கும்.
சாரைப்பாம்பு: கனவில் இந்த பாம்பை கண்டால், தனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்று அறிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.
சிவலிங்கம்: கனவில் சிவ லிங்கத்தைக் கண்டால் தெய்வ அருளும், செல்வ வசதியும் உண்டாகும்.
சிங்கம்: கனவில் சிங்கத்தைக் காண்போர், தொழிலில் அல்லது தனது உத்தியோகத்தில் உயர்வு அடைவர். சிங்கத்தைக் கண்டு பயந்தாற்போல கனவு கண்டால், யாவும் நஷ்டமாகவே முடியும். உடல்நலனும் பாதிக்கப்படும்.
சிங்கத்தை நாம் கொல்வது போல் கனவு கண்டால், பகைவர்கள் புறம் காட்டி ஓடுவர் என்று கூறலாம். சிங்கம் நம்மைக் கடித்து விட்டது போல கனவு கண்டால் ஆபத்து களும், சோதனைகளும், கஷ்டங் களும் உண்டாகும்.
சீப்பு: கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் எனலாம். ஆனால், சீப்பால் தலை வாரிக் கொள்வதுபோல கண்டால், காரிய வெற்றி ஏற்படும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால், அவருடைய நோய் விரைவில் குணமாகும்.
சூரிய கிரகணம்: சூரிய கிரகணம் பிடித்திருப்பதாக கனவு காண்பது கெடுதலானது. தொழில் நஷ்டம் ஏற்படும். அதேநேரம், கர்ப்பிணிகள், சூரிய கிரகணங்கள் தண்ணீரில் பட்டு, பிரதிபலிப்பதாக கனவு கண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையால் எதிர் காலத்தில் குடும்பம் மிகவும் மேலான நிலையடையும்.
செடிகள்: மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால், எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும். பழங்கள் நிறைந்த செடியைக் கண்டால், திரவிய சேர்க்கையும், புத்திர சம்பத்தும் உண்டாகும். ஆனால், காய்கள் மட்டுமே உள்ள செடிகளைக் கண்டால் காரியக் கேடும், பொருள் நஷ்டமும் உண்டாகும்.
செருப்பு: புத்தம் புதிய செருப்பு அணிந்து கொண்டிருப்பதுபோல கனவு கண்டால் சோதனைகளும், கெடுதிகளும் ஏற்படும். கால்களுக்குப் பொருந்தாத செருப்புகளை அணிந்து கொண்டிருப் பதாகவோ, அதனால் கால்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவோ கனவு கண்டால், இல்லற வாழ்க்கையில் இன்பம் இருக்காது.
சோம்பல்: மிகவும் சோம்பலாக இருப்பது போல காணும் கனவு, நிகழ்கால நிலைமை மாற இருத்தலைக் குறிப்பிடும்.
தவமும் தவசிகளும்!
தவசிகள்: தவயோகச் செல்வர்களைக் கனவில் காண்போர், பொதுநல தொண்டில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.
தவம்: தவம் செய்வதாக கனவு கண்டால் இறை அருள் உண்டாகும். உடலுறுதி ஏற்படும். செல்வமும் செல்வாக்கும் மேம்படும்.
தவளை: தவளைகளைக் கனவில் காண்பது நல்லது. தொழிலில் அபிவிருத்தி ஏற்படக் கூடும். தவளைகளைப் பிடிப்பதாகக் காண்பதும் நல்லதே விளைவிக்கும். ஆனால், தவளைகள் கத்துவதாகக் கனவு காண்பது கெடுதலாகும்.
தாலி: மங்கலநாணை கனவில் காண்பது, மேலான பதவிகளைக் கொடுக்கும்; பண வசதியை உண்டாக்கும்; மணமாகாதவர்களுக்கு மணம் நிகழ வைக்கும்.
தித்திப்பு: தித்திப்பு உணவை உண்பதாகக் கனவு கண்டால் தொழில் உயர்வும், பண வரவும், நண்பர் சேர்க்கையும் உண்டாக்கும்.
தீக்குச்சி: கனவில் தீக்குச்சி சம்பந்தப்பட்டவை தோன்றின் திடுக்கிடத்தக்க செய்திகள் வரக்கூடும்.
துணி: துணிகளை வாங்குவது போல கனவு வந்தால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எண்ணியவை இனிதே நிறைவேறும்.
தொழிற்சாலை: கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரைச் சொத்து வரக்கூடும்.
தோட்டம்: நாம் தோட்டம் ஒன்றில் உலவுவதுபோல கனவு கண்டால், மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை!
நல்லதே அருளும் நாவல் பழம்!
நண்டு: கனவில் நண்டைக் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் பல இடையூறுகள் இன்னல்கள் உண்டாகும். அச்செயல் வெற்றி பெறாது போகக்கூடும். கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டைக் காண்பது, கப்பலுக்கு பேராபத்தாக முடியும்.
நாவல் பழம்: கனவில் நாவல் பழத்தைக்  கண்டால், காரிய ஸித்தி ஏற்படும். தன சம்பத்தும், சந்தான சம்பத்தும் மிகுந்திடும்.
நிச்சய தாம்பூலம்: கனவில் இந்த வைபவத்தைக் காண்பது நல்லது. மணம் ஆகாதவர்கள், இந்த வைபவத்தைக் கனவில் கண்டால், விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்தேறும்.
நீதிமன்றம்: நீதிமன்றத்தைக் காண்பதாகவோ, நாம் நீதிமன்றத்தில் இருப்பதாகவோ கனவு கண்டால், வழக்குகளை எதிர்கொள்ளவோ அதனால் செலவுகளை ஏற்கவோ நேரிடும்.
நெசவாலை: நெசவு தொடர்பான கனவுகள், நன்மை அளிக்கும்.
போர் வீரன்: நாம், ஒரு போர் வீரனாக இருப்பதாகக் கனவு வந்தால், தற்போதையை உத்தியோகத்தை விட்டுவிட நேரிடும். தொழில் செய்வோர் நஷ்டப்பட நேரிடும். போர் நடப்பதாகக் கனவு கண்டால் ஏதேனும் சச்சரவு உண்டாகும்.
மெழுகுவத்தி: கனவில் மெழுகுவத்தி சுடர்விடுவதாகக் கண்டால் மகிழ்ச்சி ஏற்படும்.
வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
மலர்கள்: மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் கனவு வந்தால், நல்ல பலன்கள் கைகூடும். ஆனால், வாடிய மலர்களை கனவில் கண்டால், வியாதி உண்டாகும் என்பது குறிப்பு.
வர்ணம்: நாம் வர்ணம் பூசுவதாக கனவு காண்பது கெடுதல். ஆனால், வர்ணம் அடிக்கும் நபர்களைக் காண்பது நல்லது.
வீணை: ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பதுபோல் கனவு காண்பது நல்லது; சுப காரியங்கள் ஸித்திக்கும்.

கெட்ட கனவுகள் வராமல் இருக்க… மஹாவிஷ்ணு அருளிய ஸ்தோத்திரம்
கெட்ட கனவுகள் வராமல் தடுப்பதோடு சகலவிதமான பாவங்களையும் போக்கி, மோட்சத்தை அருளும் அற்புதமான இந்த ஸ்தோத்திரம், கஜேந்திரன் எனும் யானைக்கு மகாவிஷ்ணு உபதேசித்ததாக, ஸ்ரீமத் பாகவதம் விவரிக்கிறது. இதை, தினமும் படித்து வர, கெட்ட கனவுகள் மட்டுமின்றி, வேறு எவ்விதமான தீவினைகளும் நம்மை அண்டாது!
யே மாம் த்வாம் ச ஸரஸ்சேதம்
கிரிகந்தர கானனம்
வேத்ர கீசக வேணூனாம்
குல்மானி ஸுரபாதபான்

ஸ்ருங்காணீமானி திஷ்ண்யானி
ப்ரஹ்மணோ மே ஸிவஸ்ய ச
க்ஷீரோதம் மே ப்ரியம் தாம
ஸ்வேதத்வீபஞ்ச பாஸ்வரம்
ஸ்ரீவத்ஸம் கௌஸ்துபம் மாலாம்
கதாம் கௌமோதகீம் மம
ஸுதர்ஸனம் பாஞ்சஜன்யம்
ஸுபர்ணம் பதகேஸவரம்
ஸேஷம் ச மத்கலாம் ஸூக்ஷ்மாம்
ஸ்ரியம் தேவீம் மதாஸ்ரயம்
ப்ரம்ஹாணம் நாரதம்ருஷிம்
பவம் ப்ரஹ்லாதமேவ ச
மத்ஸ்ய கூர்ம வராஹாத்யை-
ரவதாரை: க்ருதானிமே
கர்மாண்யனந்த புண்யானி
ஸுர்யம் ஸோமம் ஹுதாஸனம்
ப்ரணவம் ஸத்யமவ்யக்தம்
கோவிப்ரான் தர்மமவ்யயம்
தாக்ஷாயணீர் தர்ம பத்னீ:
ஸோம கஸ்யபயோரபி
கங்காம் ஸரஸ்வதீம் நந்தாம்
காளிந்தீம் ஸிதவாரணம்
த்ருவம் ப்ரம்ஹரிஷீன் ஸப்த
புண்ய ஸ்லோகாம்ஸ்ச மானவான்
உத்தாயாபரராத்ராந்தே
ப்ரயதா: ஸுஸமாஹிதா:
ஸ்மரந்தி மம ரூபாணி
முச்யந்தே ஹ்யேநஸோச கிலான்
யே மாம் ஸ்துவந்த்யனேனாங்க
ப்ரதிபுத்ய நிஸாத்யயே
தேஷாம் ப்ராணாத்யயே சாஹம்
ததாமி விமலாம் மதிம்
இத்யாதிஸ்ய ஹ்ருஷீகேஸ
ப்ரத்மாய ஜலஜோத்தமம்
ஹர்ஷயன் விபுதாநீக
மாருரோஹ ககாதிபம்
கருத்து: “கஜேந்திரா! என்னை யும், உன்னையும் மட்டுமின்றி,  முதலையால் நீ பாதிக்கப்பட்ட இந்தக் குளம், அது அமைந்திருக்கும் இந்த த்ரிகூட மலை, அதன் குகை, காடுகள், மூங்கில்கள், தேவ விருட்சங்கள், இந்த மலையிலுள்ள சிகரங்கள், நானும் பிரம்மனும் சிவனும் வசிக்கும் இடங்கள், எனக்குப் பிரியமான பாற்கடல், வெண்மை நிறமுள்ள ச்வேத தீவு,  ஸ்ரீவத்ஸம் என்ற எனது மச்சம், கௌஸ்துபம், வன மாலை, கௌமோதகீ என்ற கதாயுதம், சுதர்சனம், பாஞ்சஜன்யம் என்ற சங்கு ஆகியவற்றை அனுதினமும் தியானிக்க வேண்டும்.
மேலும் கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, பிரம்மதேவன், நாரதர், பரமேஸ்வரன், பிரகலாதன் ஆகியோரையும், மச்சம், கூர்மம், வராஹம் முதலிய அவதாரங்களில் என்னால் செய்யப் பட்ட புண்யமான சரிதங்களையும், சூரியனையும், சந்திரனையும், அக்னியையும், ப்ரணவத்தையும் ஸத்யமான பரம்பொருளையும், பசுக்களையும், வேத வித்துக்களையும், அழியாத தர்மத்தையும், தட்சனின் பெண்களான தர்மதேவதையின் பத்தினிகளையும், சந்திரன், கச்யபர் ஆகியோரின் பெருமைகளையும், கங்கை, சரஸ்வதி, யமுனா ஆகிய நதிகளையும், ஐராவதம், துருவன், பிரம்ம ரிஷிகள் எழுவர், புண்ணிய சரித்திரம் உள்ள நளன், தருமபுத்திரர் ஆகியோரைக் குறித்த சிந்தனைகளுடன், எனது ரூபங்களை… விடியற்காலையில் எழுந்ததும் பரிசுத்தர்களாகவும். ஒருமைப்பட்ட மனமுடையவர்களாகவும் இருந்துகொண்டு எவரொருவர் தியானிப்பார்களோ, அவர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுவார்.
அனுதினமும் அதிகாலையில் இந்த ஸ்தோத்திரங்களை எவர் படிக்கிறாரோ, அவருடைய மரண காலத்தில் சிறந்ததான மோட்சத்தை அளிப்பேன்” என்று  கஜேந்திரன் எனும் யானைக்கு திருவருள் புரிந்த மகாவிஷ்ணு, தன்னுடைய சங்கை எடுத்து முழங்கிவிட்டு, தேவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துவிட்டு, கருடன் மீது ஏறிச் சென்றார்.ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவாக்குப்படி, இந்த தெய்வ ஸ்தோத்திரத்தை அனுதினமும் உடல்-உள்ள சுத்தியோடு பாராயணம் செய்து, மகிழ்வான வாழ்வைப் பெறுவோம்.

Friday, September 23, 2016

டெங்குவை அழிக்கும் இயற்கை வைத்தியம்!

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பது கடினமாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு முறைகளைப் பின்பற்றி டெங்கு காய்ச்சல் வராமல் தப்பிக்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு…
டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த வைத்திய மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

நிலவேம்புக் குடிநீர் தயாரி்க்கும் முறை…

நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க, கஷாயம் குடித்த பின், பனங்கற்கண்டைச் சுவைக்கலாம்.
டெங்கு வராமல் தடுக்க…
டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு…
*ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுக் குடிக்கலாம்.
*தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.
*நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது.
*சீந்தில் கொடியின் தண்டு, வில்வ இலை, துளசி,  மஞ்சள், நெல்லிக்காய், பளிங்கு சாம்பிராணி,  திப்பிலி ஆகிய மூலிகைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
*கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முட்டை, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
ரத்தக் கசிவு வராமல் இருக்க
உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூரல் லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க
பப்பாளி இலைச் சாற்றை 5 – 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.
கொசு வராமல் தடுக்க
*கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களை பயன்படுத்துவதும் ஒரு சிறந்த வழிதான்.
*தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.
*கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை எடுத்து, அதைத் தண்ணீரோடு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.
*வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டுத் துளசி, பேய்த் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் கிராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதும் நல்லது.
*வியர்வை வாசம் இருந்தால் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்பதால், தினமும் இருவேளை குளிப்பது நல்லது.
*மாலையில் வீட்டில் வேப்பிலை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.

புதுசா… இளசா… அழகா… – ரிலாக்ஸ் ப்ளீஸ்

“அதிகாலை குட்டி தூக்கம், முகப்பருவை விரட்ட ஹெல்த்தி டயட், தோழிகளுடன் அவுட்டிங் என தனக்கான நேரங்களை திருமணத்துக்குப் பிறகு தொலைத்துவிட்டு, கணவர், குழந்தை என தங்களது முழு நேரத்தையும் குடும்பத்துக்காகவே செலவழிக்கும் பெண்கள், தங்களுக்கே தங்களுக்கான நேரத்தை ரசித்துச் செலவழித்தால்,

தங்களை என்றும் புத்துணர்வாக வைத்துக் கொள்ள முடியும்” என அறிவுறுத்துவதுடன், அதற்கான ஆலோசனைகளையும் தருகிறார், அவதார் கேரியர் க்ரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் செளந்தர்யா ராஜேஷ்.
புத்தம்புது காலை
தினமும் காலை அரக்கப்பரக்க எழுந்து குழந்தை மற்றும் கணவரை பள்ளி/அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, உடனே அடுத்த வேலையை  கையில் எடுக்காதீர்கள். உங்களுக்கான ஒரே ஒரு மணி நேரத்தை உருவாக்குங்கள். நியூஸ்பேப்பர் படித்துக் கொண்டே விரும்பிய பாடல் கேட்பது, நேற்று படித்த புத்தகத்தைத் தொடர்வது என விரும்பும் வண்ணம் செலவழியுங்கள்.
நமக்கு நாமே
உங்களது அனைத்துத் தேவைகளுக்கும்  மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். கார் அல்லது டூவீலர் ஓட்டத் தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு வெளியில் சென்று குடும்பம்/தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், சமையல் எரிவாயு போன்ற தேவைகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கட்டுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், போஸ்ட் ஆபீஸ் என சேவிங்ஸ் பற்றியும் அறிந்துகொண்டு களம் இறங்குங்கள். அப்புறமென்ன… `எங்கம்மாவுக்கு எல்லாமே தெரியும்’, `என் வொஃய்ப் செம பிரில்லியன்ட்’ போன்ற புகழாரத்தைக் காது குளிர கேளுங்கள்!
மேம்படுத்திக்கொள்ளுங்கள்
குடும்பத்தைக் கவனித்தது போக உங்களுக்கான நேரத்தைக் கண்டுபிடியுங்கள். உங்களுக்கு விருப்பமான கோர்ஸ் என்ன படிக்கலாம் என்று பாருங்கள். சமையல்கலை, அழகுக்கலையில் ஆரம்பித்து டேலி, ஐ.சி.டபிள்யூ.ஏ என பலவகை படிப்புகள் உள்ளன. வீட்டிலிருந்தபடியே படிக்கக்கூடிய படிப்புகளும் இதில் அடங்கும். ஆர்வம் மற்றும் திறமையைப் பொறுத்து உங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.
ஆரோக்கிய வாழ்வு
குடும்பத்தாரின் உடல்நலம் முதல் உடை, நடை வரை அனைத்திலும் அக்கறை காட்டும் நீங்கள், உங்களுக்கான நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். குடும்பத்துக்கான மாத பட்ஜெட்டில் உங்களுக்காகவும் ஒரு சிறிய தொகையை ஒதுக்கிக்கொள்ளுங்கள். முதுகுவலியில் ஆரம்பித்து மூட்டுவலி வரை, உங்களின் உடல் நலக் குறைவுகளுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அதோடு, ஐப்ரோ த்ரெடிங், ஹேர் கட், ஃபேஷியல் என உங்களது தோற்றத்துக்கான சிறு மெனக்கெடலையும் செய்தால் தன்னம்பிக்கை மிகுந்த அழகு தேவதையாக ஜொலிக்கலாம்!
திறமைக்கு அங்கீகாரம்
ஆங்கிலத்தில் ‘Rise to the fullest of your Potential’ என்று சொல்வார்கள். அதாவது, செய்கிற செயலில் நம்முடைய முழுத்திறமையை செலுத்துவது. நன்றாக சமைக்கத் தெரிந்தால், ப்ளாக் தொடங்கலாம். ஹிந்தி நன்றாக படிக்க, பேச தெரியும் என்றால், அருகில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கலாம். தையல்கலை தெரிந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுக்கு தையல் வகுப்பு எடுக்கலாம். இப்படி வீட்டிலிருந்தபடியே உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தை தேடிக் கொள்ளுங்கள்.
குடும்பம் மற்றும் வேலை
வாழ்க்கையை வளமாக்கிக்கொள்வதற்குதானே வேலை செய்கிறீர்கள். அதனால் வேலை, குடும்பம் இரண்டையும் விரும்பி பாருங்கள். `ஆபீஸ்ல எவ்ளோ பிரஷர் இருக்கு தெரியுமா? வீட்டுக்கு வந்தா சும்மா நொய் நொய்ங்குற’ என வேலையில் உள்ள மன அழுத்தத்தை வீட்டில் காட்டாதீர்கள். உங்களைப் போலவே உங்கள் கணவர், மாமியார் ஆரம்பித்து பிள்ளைகள் வரை அவரவருக்கு ஏற்ப பிரஷர் இருந்து கொண்டுதானே இருக்கும்? அதனால் வேலை, குடும்பம் என இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

நட்பு வட்டம்

உங்களுடைய நட்பு வட்டத்தை புதுப்பியுங்கள். எடுத்ததுமே `இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?’ என சலிப்படை யாதீர்கள். இருக்கவே இருக்கிறது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பல டெக்னாலஜிகள். தினசரி சில நிமிடங்கள் நட்பு வட்டத்துடன் செலவழிக்கும்போது மனம் இலகுவாகும்; புது தெம்பு பிறக்கும்; புது விஷயங்கள் கண்ணுக்கு புலப்படும்; புதிய வாய்ப்புகள் உருவாகக்கூடும். அதனால் நட்பு வட்டத்தை எதற்காக வும் இழந்துவிடாதீர்கள்.
எனக்கான நாள்
வழக்கமான உங்களது வேலைகளை, வாரம் அல்லது மாதம் ஒருமுறை உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டு… அன்று மட்டும் நீங்கள் கண்காணிப்பாளராக மாறிவிடுங்கள். அவர்கள் மல்லுகட்டி திணறும் காட்சிகளை ரசித்துக் கொண்டே… அவற்றை எல்லாம் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுங்கள். முடிந்த அளவு வீட்டு வேலைகள் அனைத்தையும் குடும்பத்தினருக்கு கற்றுக்கொடுங்கள். ஏதோ ஒரு அவசரகாலத்தில் அது கைகொடுக்கும் என்பதை உணர்த்துங்கள்.

Wednesday, September 21, 2016

வாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்!

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலன் தரும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்ப்போம்,
 
திங்கள் – அருகம்புல்

குறட்டை சத்தம் நீங்க!
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். கொதித்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற பிரச்னைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
 
செவ்வாய் – சீரகம்
ஆழ்ந்த உறக்கத்திற்கு…
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிச்சல் நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 
 
புதன் – செம்பருத்தி
இரத்த சுத்திகரிப்புக்கு…
இரண்டு செம்பருத்தி பூ ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 
 
வியாழன் – கொத்துமல்லி
இளநரை மறைய…
ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 
 
வெள்ளி – கேரட்
மஞ்சள் காமாலைக்கு..
ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.
 
சனி – கரும்பு சாறு
உடல் பருமனை குறைக்க…
கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.
 
ஞாயிறு – இளநீர்
ஜீரண சக்திக்கு…
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
அன்னாசி பழச்சாறு,கரும்புச்சாறு, இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. உணவுக்குப்பின் 2 மணி நேரம் கழித்து குடிக்கவும். பசும்பால் இல்லையென்றால், அதற்கு பதிலாக வேறு பால் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. மற்ற இயற்கை பானங்களை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்னதாக குடிக்கவும்.

Monday, September 12, 2016

பணத்தை மிச்சப்படுத்தும் பசுமை வீடுகள்!

இன்றைக்கு நம் பட்ஜெட்டில் கணிசமான பணத்தைச் சாப்பிட்டுவிடுகிறது வீட்டுப் பராமரிப்புக் கான செலவு. ஒரு மாதத்துக்கு கரன்ட் பில் ரூ.1,000, குடிதண்ணீர் செலவு ரூ.750 என நம் வருமானத்தில் 5 முதல் 10 சதவிகிதம் இது மாதிரியான கட்டணங்களைச் செலுத்தவே செலவாகி விடுகிறது.
காலம் செல்லச் செல்ல இந்தச் செலவுகள்  எகிறிக்கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற சில மாதாந்திர செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரே வழி, பசுமை வீடுகள்தான். சுத்தமான காற்றும், சூரிய வெளிச்சமும் இல்லாமல் நகர நெரிசலில் புறாகூண்டு வீட்டுக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் இந்தப் பிரச்னைக்கு எளிதான தீர்வு பசுமைத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும்  வீடுகள்தான். 

பசுமை வீடுகள் என்றவுடன், நீங்கள் நினைப்பது போல, அரசாங்கம் கட்டித் தரும் பசுமை வீடுகள் அல்ல. குடியிருக்கும் வீட்டில் குறைந்த அளவு தண்ணீரையும், அதிக அளவு வெளிச்சத்தையும் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாக்க உதவுவதே ‘பசுமை வீடுகள்’. இந்த வீடுகளால் இயற்கை மட்டுமல்ல, இந்த வீடுகளில் குடியிருப்போரும் அதிகம் பயனடைந்து வருகிறார்கள்.
சென்னையை அடுத்த  தாம்பரம் அருகே  ஒட்டியம்பாக்கத்தில் அபார்ட்மென்ட்டில் வாங்கிய பசுமை வீட்டில் வசித்து வரும் சரவணன், அந்த வீட்டைப் பற்றி ஆர்வமாக நம்மிடம் பேசினார். “நான் பசுமை வீடு வாங்க முடிவு செய்தபோது,  செங்கல் இல்லாமல் கட்டுவோம் என்று பில்டர் சொன்னதைக் கேட்டு,  எனக்கு சின்னத் தயக்கம் இருந்தது. ஆனால் ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸைப் பற்றி சொன்னவுடன், அந்தத் தயக்கம் விலகிவிட்டது. அதுமட்டுமன்றி வீட்டின் ஜன்னல்கள், மொட்டை மாடி தளங்கள், இடைவெளி விட்டுக் கட்டப்பட்ட  சுற்றுச்சுவர், மழைநீரை  சேகரித்து உபயோகப்படுத்தும் முறை என அனைத்தும் இங்கே இருக்கிறது. இதனால் மின்சாரம், குறிப்பாக ஏ.சி பயன்பாடு குறைகிறது” என்றவர், பசுமை வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
நோ செங்கல், ஒன்லி ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸ்!
செங்கல்லினால் கட்டப்படும் கட்டடங்கள் மிகவும் உறுதியானதாகவும் தரமாகவும் இருக்கும். ஆனால், வெயில் காலத்தில் வீட்டுக்குள் வெப்பத்தை  நுழைய விட்டுவிடும். மாற்றாக, ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸை உபயோகித்துக் கட்டினால், வெயில் காலத்தில் வெப்பம் வீட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும். இதில் ஒரே பிரச்னை, ஆணி அடிக்கும்போது மெதுவாக அடிக்க வேண்டும். மற்றபடி செங்கல்லுக்கு இணையான உறுதித்தன்மையும், தரமும் இதில் இருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது.

மொட்டை மாடியில் ‘வெர்மிடைல்’!
மொட்டை மாடியில் சாதாரண ஓட்டு வகைகளையே பலரும் பதிப்பது வழக்கம். இதனால் தண்ணீர் புகுவதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், கட்டடத்தின் உள்ளே வெப்பம் இறங்குவதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு மாற்றாக ‘வெர்மிடைல்’ வகையைச் சேர்ந்த டைல்ஸை வீட்டின் மொட்டை மாடியில் பதிப்பதால், வீட்டின் உள்அறைகள் குளிர்ச்சியாக மாறுகின்றன. இதனால் ஏ.சி,  ஃபேன் போன்றவற்றை குறைவாகப் பயன்படுத்தலாம். அதிகரிக்கும் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். வீட்டின் மேற்கூரையின் மேல் ஏற்படும் நீர்க்கசிவையும் இந்த டைல் தடுக்கும் என்பதால் கட்டடத்துக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது. குளிர்சாதனப் பயன்பாட்டைக் குறைப்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இது வெள்ளை நிறமாக இருப்பதால், சூரிய ஒளியை சிதறடித்து கட்டடத்தினுள் வெப்பத்தைப் புக விடாது.
மழைநீர் சேகரிப்பு!
இன்று தரமான, சுத்தமான தண்ணீர் என்பது மிகப் பெரிய பிரச்னை. மிகவும் சுத்தமானதும் தரமானதும் மழைநீர். எனவே, அதனை  வீணாக்காமல் சேமிக்கலாம். இந்த அபார்ட்மென்ட்டில் மேல் தளத்தில் விழும் மழைநீரை குழாய் மூலம் எடுத்துவந்து, போர்வெல்லுக்கு அருகில் இருபது அடி ஆழத்தில் கிணறுபோல அமைக்கப்பட்டு  சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் கண்டிப்பாக உயருகிறது. ஆரம்பத்தில் கிடைத்த தண்ணீரின் சுவை இன்னும் அப்படியே இருப்பதை வைத்து இதனைக் கண்டுபிடிக்கலாம்.

வீட்டின் ஜன்னல்கள்!
வீடுகளில் அமைக்கப்படும் ஜன்னல்கள் அதிக காற்றோட்டம் கொண்டவையாக அமைக்கப் பட்டுள்ளன. ஜன்னலில் கண்ணாடியின் தன்மை யும் வித்தியாசமானது. என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள், வெளிச்சத்தை அதிகமாக உள்வாங்குவதுபோல அமைக்கப் பட்டுள்ளன. ஆனால், வெளியில் இருந்து ஜன்னல் வழியே பார்த்தால், வீட்டுக்குள் இருப்பது எதுவும் தெரியாது. வெளிச்சம், காற்றோட்டம் அதிகமாக இருப்பதால், மின்சாரப் பயன்பாடும், மின் சாதனப் பயன்பாடும் கணிசமாகக் குறைகிறது.
வீட்டில் வளர்க்கும் பசுமைச் செடிகள்!
வீட்டைக் குளுமையாக்கவும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும், பால்கனிகள் மற்றும் வாசற்படிக்குப் பக்கத்தில் செடிகளை வளர்க்கிறேன். வெறும் அழகுக்கு மட்டுமல்லாமல் மருத்துவக் குணங்கள் நிறைந்த செடியாக இருப்பதால், ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும், அபார்ட்மென்ட்டின் மாடியிலும் மாடித்தோட்டம் அமைத்துள்ளோம்.
இது அபார்ட்மென்ட் என்பதால், சோலார் மின்சார வசதியை மட்டும் நாங்கள் செய்துகொள்ள வில்லை. தனி வீடுகளுக்கு சோலார் அமைப்பதன் மூலம் நம் வீட்டின் மின்சாரச் செலவினை இன்னும் கணிசமாகக் குறைக்கலாம்.

தனியாக பசுமை வீடு கட்டுபவர்கள் சாதாரணக் கட்டுமானத்திலிருந்து 10% கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், பிற்காலத்தில் அந்தப்   பணத்தைவிட இரண்டு மடங்கு பணத்தை நம் மாத பட்ஜெட்டில் மிச்சமாக்க உதவும்.
இனியாவது புதிதாகக் கட்டிய வீட்டை வாங்கும்போதும் அல்லது வீட்டைக் கட்டும்போதும் வெறும் கலர், டிசைன் என்று மட்டும் பார்க்காதீர்கள். பசுமை வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தி, பசுமை டெக்னாலஜி அடிப்படையில் வீட்டைக் கட்டி இருக்கிறார்களா, மின் விளக்கின் துணை இல்லாமல் போதிய அளவு காற்றும் வெளிச்சமும் கிடைக்கிற மாதிரி இருக்கிறதா என்பதை எல்லாம் பார்த்து வாங்கினால், நாம் ஆரோக்கியமாக வாழலாம்’’ என்றார்.
பசுமை வீடுகளை அமைப்பதற்குப் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘காவ்யா ஹோம்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ்.
“ஓர் இடத்தில் உள்ள மண்வளத்தைக் காப்பதில் இருந்து, வீட்டில் தினசரி பயன்படுத்தும் நீரை மறுசுழற்சி செய்து செடிகளுக்கு மற்றும் வீட்டின் பிற தேவைகளுக்குப் பயன்படுத்துவது மற்றும் மின்சார உபயோகத்தையும், மின் சாதனங்களின் பயன்பாடுகளைக் குறைப்பது போன்ற விஷயங்களை வீடு கட்டுவதற்கு முன்னரே திட்டமிட்டுக் கட்டுவதற்குப் பெயர்தான் பசுமை வீடு என்று சொல்கிறோம். ஒரு வீடு கட்டப்படும் முன்பே அந்த இடத்தின் மண்ணின் தன்மை பற்றி முழுமையாக ஆராய வேண்டும். மண்ணின் தன்மைதான் ஒரு கட்டடத்தின் வாழ்நாளை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. அடுத்தது காம்பவுண்டுக்கும் கட்டடத்துக்கும் போதுமான இடைவெளி முக்கியம்.
இன்று பெரும்பாலானோர் முறைப்படி கட்டடம் கட்டுவதில்லை. இந்தப் பசுமை வீடுகளை அமைப்பதற்கு தனி வீடு, அபார்ட்மென்ட்டுகள், அலுவலகங்கள் என எந்த வித்தியாசமும் இல்லை.  கட்டும்போதே திட்டமிட்டால்  அனைத்தும் பசுமை வீடுதான். அதுமட்டுமன்றி, ஏற்கெனவே கட்டி முடித்த கட்டடங்களையும் பசுமையாக மாற்றி அமைக்க முடியும். இதற்குப் பல புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன.
இந்தத் தொழில் நுட்பங்கள் சமீப காலமாக அதிக அளவில் வளர ஆரம்பித்துள்ளது. பழைய கட்டடங்களைப் பசுமை வீடாக மாற்றும்போது அந்தக் கட்டடத்தை இடித்ததிலிருந்து கிடைக்கும் பொருட்களைப் புதிய கட்டடத்தில் பயன்படுத்திக்கொள்கிறோம். அதனால் அதிகளவில் செலவாவதில்லை. பசுமை வீடுகளால் நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும்; செலவும் குறைவாக இருக்கும். கட்டடங்களைக் கட்ட சாதாரணமாக ஆகும் செலவினைவிட அதிகபட்சம் 10% வரை செலவாகலாம். நம் தேவையினைப் பொறுத்துதான் செலவுகளும் அமையும்.
பழைய கட்டடங்களை மாற்றுவதற்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டும்போதே பசுமை வீடாகக் கட்டினால் செலவு இன்னும் குறையும். வழக்கமாக செலவாகும் மின்சாரத்தைவிடக் குறைவாக செலவாகும். மழைத் தண்ணீரை, கிணறுபோல அமைத்து உள்ளே விட்டு சேமித்தால், தண்ணீருக்காக செய்யும் செலவு குறையும். இதனால் பின்னாளில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்க்கலாம்.
வீட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள், வெளிச்சத்தை அதிகமாக உள்வாங்குவதால், அறையில் அதிக வெளிச்சம் கிடைக்கிறது. அதேபோல, உங்களுடைய அந்தரங்கத்துக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் (வெளியே இருந்து யாராவது கண்ணாடி வழியாகப் பார்த்தால் உள்ளே இருப்பது தெரியாது) இருக்கும்.
 
மேலும், செங்கல்லுக்கு பதில் ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸை வாங்கிக் கட்டடம் கட்டலாம். இதன் மூலம் வெளியில் இருந்துவரும் வெப்பத்தை உள்வாங்கி, கட்டடத்துக்குக் குளிர்ச்சியைத் தரும். மொட்டை மாடியில் ‘வெர்மிடைல்’ வகையைச் சேர்ந்த டைல்ஸைப் பதிப்பதன் மூலம் தண்ணீர் வீட்டுக்குள் புகாமல் தடுக்கலாம். இது வெப்பத்தை மாற்றி அறையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால் ஏசியின் பயன்பாடு மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது. ஒரு அறைக்கு குறைந்தது ஒரு ஜன்னலாவது வைப்பதன் மூலம், அதிக காற்று வந்து செல்ல வசதியாக இருக்கும்.
ஐந்து அடி இடைவெளி விட்டுக் கட்டப்படும் கட்டடமாக இருந்தால், அந்த இடத்தில் மரங்கள், காய்கறிகள் என அனைத்தையும் வளர்க்கலாம். காற்று இன்னும் தூய்மையாகக் கிடைக்கும். இதில் முக்கியமானது வீட்டு காம்பவுண்டில் இருந்து கார்கள், பைக்குகள் ஆகியவற்றை வீட்டுக்குள் ஏற்றப் பயன்படும் தளத்தினை அமைக்கும்போது கீழே தண்ணீர் செல்லுமாறு அமைக்கலாம்’’ என்றார்.
வீடு கட்டும்போது அதிகம் செலவாகுமே என்று பயந்த மக்கள் இப்போது பசுமை வீடுகளின் பயனை உணர்ந்து, தங்கள் வீடுகளை பசுமைத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். பசுமை வீடுகளில் பயன்படுத்தப்படும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் தானியங்கிக் கருவிகள் எனப் பலவற்றையும் இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்.
என்ன பாஸ், பசுமை வீட்டைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா! பட்ஜெட்டைப் போடுங்க… பசுமை வீட்டைக் கட்டுங்க!

Sunday, September 11, 2016

இளமை காக்கும் ஆன்டிஏஜிங் வொர்க் அவுட்

thanks to vayal on

வ்வொரு ஆண்டும் வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு, ஒரு நம்பர் கூடுகிறது என்பது அல்ல… நம்முடைய உடலில் இருந்து செல்களும் வெளியேறுகின்றன என்று அர்த்தம். ஒவ்வொரு 10 ஆண்டிலும் மனித தசையின் எடை இரண்டரை முதல் மூன்று கிலோ

குறைகிறது. அதனால்தான், 20-30 வயதில் இருந்த உறுதியான தசைகள், 50 வயதில் இருப்பது இல்லை. உடற்பயிற்சி செய்வது நம்மை இளமையாக வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன்மூலம், செல்கள் இழப்பைத் தவிர்க்க முடியும். வயதாவதைத் தாமதப்படுத்தும் சில பயிற்சிகளைப் பார்ப்போம்.

நெக் ரொட்டேஷன் – அப் அண்ட் டவுன் (Neck Rotation – Up and Down)

கைகளை இடுப்பில் வைத்தபடி, தரையில் நேராக நிற்க வேண்டும். தலையைச் சாய்க்காமல் இயல்பாக நின்று, மூச்சை நன்கு இழுத்தபடி,  தலையை மேல்நோக்கி உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். பின்னர், மூச்சை இழுத்தபடி, தலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். மூச்சை வெளிவிட்டபடி, தலையை கீழே இறக்க வேண்டும். பின்னர், மூச்சை மெதுவாக வெளிவிட்டபடி இயல்புநிலைக்கு வர வேண்டும். இப்படி 15 முறை செய்யவேண்டும். பின்பு 20 விநாடிகள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 முறை செய்யலாம்.

பலன்கள்:
கழுத்து எலும்பு வலுவடையும். தைராய்டு பிரச்னை வராது.
நெக் ரொட்டேஷன் – சைடு பை சைடு (Neck Rotation – Side by Side)
கைகளை இடுப்பில் வைத்தபடி, தரையில் நேராக நிற்க வேண்டும். மூச்சை நன்கு இழுத்தபடி தலையை வலது புறமாகவும், வெளியேவிட்டபடி இடது புறமாகவும் திருப்ப வேண்டும். இது ஒரு செட். இதேபோல 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:
முதுகுத் தசைகள் வலுவடையும். தலைவலி, கழுத்துவலி வராது. புத்தகம் வாசிக்கும் போது தலையை வளைத்து, சாய்த்துப் படிப்பவர்களுக்கு இவ்வகைப் பயிற்சி ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும்.
பெக்டோரல் (Pectoral)
நேராக நிமிர்ந்து நின்று, தோள்பட்டை அளவுக்கு கைகளை உயர்த்தி, மார்புக்கு நேராக, வலது கை மீது இடது கை விரல்கள் படும்படி வைக்க வேண்டும். இப்போது, மூச்சை நன்கு இழுத்தபடி, ஒரு ஜாண் அளவுக்குக் கைகளை விலக்கி, மூச்சை வெளிவிட வேண்டும். இப்படி 20 முறை செய்யவேண்டும்.

பலன்கள்:
மார்புத் தசைகள் விரிவடைந்து, வலுவடையும். கைகளைப் பிரிக்கும்போது நடுமுதுகுத் தசைகள் உறுதியாகும்.

ஸ்குவாட் (Squad)

கால்களை சற்று அகட்டி, நேராக நிற்க வேண்டும். கையை முன்பக்கமாக நீட்டி, கை விரல்களைக் கோத்து (சோம்பல் முறிப்பதுபோல்) வெளிப்புறம் தள்ள வேண்டும். இப்போது மூச்சை இழுத்தபடி, நாற்காலியில் அமருவதுபோன்று கால்களை மடக்கி உட்கார வேண்டும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்துவிட்டு, மூச்சை வெளிவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:
அடக்டார் தசை வலுவடையும். மூட்டு வலி குறையும்; குதிகால் வலுவடையும்.

போட் (Boat)

தரையில் மல்லாந்து படுத்து, கால்களைச் சற்று அகட்டி வைக்க வேண்டும். இப்போது, கால்களை 45 டிகிரிக்கு உயர்த்தவேண்டும். கால்களைத் தொடும் வகையில், கை மற்றும் மேல் உடல் பகுதியை நன்கு உயர்த்தி, 20 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் 3 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:
பெண்கள் அவசியம் செய்யவேண்டிய உடற்பயிற்சி இது.  இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள உள் உறுப்புகள் நன்கு தூண்டப்படுகின்றன. கர்ப்பப்பை, சினைப்பை பலப்படும். மாதவிலக்கு, கர்ப்பப்பை பிரச்னைகள் விலகும்.
ஷோல்டர் டெல்டாயிட் (Shoulder Deltoid)
நேராக நிமிர்ந்து நின்று, கைகளை மார்புக்கு நேராகக் கும்பிடும் நிலையில் வைக்கவேண்டும். பின்னர் இரண்டு கைகளின் அடிப்பகுதியையும் இணைத்து, மூச்சை நன்கு இழுக்கவேண்டும். இரண்டு கைகளும் ஒட்டியிருக்கும் நிலையிலேயே, மூச்சை வெளிவிட்டபடி கைகளை மேலே உயர்த்தவேண்டும். இப்படி 20 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:
தோள்பட்டைத் தசைகள் வலிமை அடையும். ரத்த ஓட்டம் சீராகும். மூளையின் சிந்திக்கும் திறன் மேம்படும்.
அயர்ன் மேன் (Iron Man)
முழங்கை மற்றும் கால் விரல்களைத் தரையில் பதித்தபடி, குப்புறப்படுக்க வேண்டும். தலை, முதுகு, கால் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். இப்போது முழங்கை, கால் விரல்களால் உடலைத் தாங்கும்படி, உடலை உயர்த்த வேண்டும். இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை மூன்று முறை செய்யலாம்.

பலன்கள்:
ஒட்டுமொத்த உடலும் உறுதியாகும். உடலுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். தசைகளின் இயக்கம் சீராக இருக்கும்.

Tuesday, September 6, 2016

அதிகாலையை அழகாக்குவோம்!

காலையில் அவசர அவசரமாக எழுந்து, உண்டும் உண்ணாமலும் நான்கு வாய் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரக்கப்பறக்க அலுவலகம் சென்று, மதியச் சோறு மறந்து பாடுபட்டு, சோர்வாக வீட்டுக்குத் திரும்பி, படுக்கையில் விழுந்தால்… மீண்டும் காலையில் எழுந்து அதே மாரத்தான் ஓட்டம்! தினம் தினம் இப்படி டென்ஷனாகத்தான் ஓட வேண்டுமோ? இல்லை. ஒரு நாளின் காலைப் பொழுதுதான் அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆரம்பப்புள்ளி. அந்தக் காலைப் பொழுதை முறையாகத் திட்டமிட்டால், அன்றைய முழு நாளும் உற்சாகம் ததும்பும். அது எப்படி எனுப் பார்ப்போமா?


1
அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தின் அடிப்படை. அதிகாலை எழும் பழக்கத்தைக் கைக்கொள்ள, முதல் நாள் குறித்த நேரத்துக்கு உறங்கவேண்டியது அவசியம். குழந்தைகள் என்றால், 10 மணி நேரம் ஆழ்ந்த உறக்கமும், பெரியவர்கள் என்றால் 6-8 மணி நேர உறக்கமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் அவசியம். வளரிளம் பருவத்தினருக்கு தூங்கும் நேரத்தில்தான் ஹார்மோன்கள் சீராகச் சுரக்கும். அதனால், குறிப் பிட்ட நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கம் மிக மிக அவசியம்.
2 எழுந்ததும் மொபைல், டி.வி., சோஷியல்மீடியா பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நம் நேரத்தைச் சுரண்டி, கண்களையும் மனதையும் கெடுக்கிறது. காலையிலேயே நம் மனஅழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இதனால், நாம் புத்துணர்ச்சியை இழந்துவிடுகிறோம்.
3 எழுந்ததும் தண்ணீர் பருகி, காலைக்கடன்களை முடித்துவிட்டு, 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா என எதுவாகவும் இருக்கலாம்.
4 காலையில் வெளியில் நடக்கச் செல்வது அல்லது விளையாடச் செல்வது, உடலுக்கு மட்டும் அல்ல, மனதுக்கும் நல்லது. காலையில் கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் உடலுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
5 அடுத்த ஒரு மணி நேரத்தில் நிதானமாகக் குளித்து, தவறாமல் காலை உணவை உண்ண வேண்டும். ஆவியில் வேகவைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என ஏதாவது ஒன்றுடன், இடியாப்பம், இட்லி போன்ற வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
6 எட்டு மணிக்கு மேல், பரபரப்பான வாழ்க்கையில் சுழலப்போகிறோம். அலுவலகம் செல்வதற்கான பயண நேரத்தைத் திட்டமிட்டு, குறித்த நேரத்துக்குச் சற்று முன்னதாகவே சென்றுவிடுங்கள். இது பணியிடத்தில் டென்ஷன் இன்றி, உங்கள் ஒருநாளைத் திட்டமிட உதவும்.

பங்கு தரகுக் கட்டணங்கள்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ங்குச் சந்தையில் தினமும் பங்கை வாங்கி விற்கும்போதும், நீண்ட கால முதலீட்டு நோக்கில் பங்கை வாங்கி, விற்கும்போதும் என்னென்ன கட்டணங்கள் கட்ட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால்  லாபம் அல்லது நஷ்டத்தை சரியாகக்

கணக்கிட முடிவதில்லை. பங்கை வாங்கி, விற்கும்போது கட்ட வேண்டிய தரகுக் கட்டணங்கள் என்னென்ன என்று கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். விரிவாக விளக்கினார்.
‘‘இந்தியாவில் பங்கு முதலீடு குறித்த விழிப்பு உணர்வு தற்போதுதான் அதிகரித்து வருகிறது. அதனால், முதலீட்டாளர்களை தக்கவைத்துக் கொள்ள  தரகு நிறுவனங்கள் தரகு மற்றும் கையாளுதல் கட்டணங்களில் சலுகைகளை அளிக்கின்றன.
சில தரகு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் டெலிவரி அடிப்படையில் பங்கு வாங்குபவர் களுக்கு தரகுக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. சில தரகு நிறுவனங்களில் ஆண்டு அல்லது மாதத்துக்கு குறிப்பிட்ட தொகையை தரகுக் கட்டணமாகச் செலுத்திவிட்டால் போதும், அதன் பிறகு  எத்தனை முறை டிரேட் செய்தாலும்  கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, நீங்கள் டெலிவரி எடுக்கப் போகிறீர்களா,  இன்ட்ரா டே டிரேடரா என்பதைப் பொறுத்து,  தரகுக் கட்டணம் கூடும் அல்லது குறையும்.  
சில பெரிய நிறுவனங்கள் கையாளுதல் கட்டணம் வாங்குவதில்லை. அவர்கள் முதலீட்டாளர்களுக்கு ஸ்டேட்மென்ட்டுகள், கான்ட்ராக்ட் நோட்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவிடுவதே காரணம்.  
உதாரணமாக ஒருவர், அசோக் லேலாண்ட் பங்கை 100 ரூபாய்  என்கிற விலையில்  100 பங்கு கள் வாங்குகிறார் என்றால், மொத்தம் 10,000 ரூபாய் செலவிட்டிருப்பார். அந்த பங்குகளை 110 ரூபாய்க்கு அதிகரித்ததும் விற்கிறார். வாங்கும் போது 10,000 ரூபாய், பங்கை விற்கும் போது 11,000 ரூபாய், ஆக மொத்தத்தில் 21,000 ரூபாய்க்கு டேர்ன் ஓவர் நடந்திருக்கிறது. 
இங்கு தரகுக் கட்டணமாக இன்ட்ரா டேக்கு 0.05%, டெலிவரிக்கு 0.5% எடுத்துக் கொள்கிறோம். அதேபோல் தரகு நிறுவனம் குறைந்தபட்ச மாக 25 ரூபாய் வசூலிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

ரகுக் கட்டணம், கையாளுதல் கட்டணம்!
மேற்கூறிய உதாரணத்தில் 10,000 ரூபாய்க்கு இன்ட்ரா டே வர்த்தகத்தில் பங்குகளை வாங்கினால் தரகு கட்டணம் (10,000×0.05/100) ரூ. 5. அதே நாளில், 11,000 ரூபாய்க்கு அதே பங்குகளை விற்றால்  தரகு கட்டணம் (11,000×0.05/100) ரூ.5.5.  ஆக மொத்தத்தில் இன்ட்ரா டேவில் அசோக் லேலாண்ட் பங்கை வாங்கி, விற்றதில்  தரகுக் கட்டணம் 10.5 ரூபாய்தான். 
சில தரகு நிறுவனங்கள் இதற்குப் பதிலாக குறைந்தபட்சமாக 25 ரூபாய் தரகுக் கட்டணம் வசூலிக்கிறது.  இன்ட்ரா டேவைப் பொறுத்த வரை ஒரே நாளில் வாங்கி விற்று விடுவதால், வாங்குவதற்கு தனியாகவும், விற்பதற்கு தனியாகவும் ஸ்டேட்மென்ட்களும், கான்ட்ராக்ட் நோட்களும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, பங்கை வாங்குவதற்கான  தரகுக் கட்டணம் + விற்கும் போது தரகுக் கட்டணம் = ரூ. 10.5.  மீதமுள்ள 14.5 ரூபாய் கையாளுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதே பரிவர்த்தனைகளை டெலி வரிக்கு கணக்கிட்டுப் பார்ப்போம். ஒருவர் 10,000 ரூபாய்க்கு பங்குகளை வாங்குகிறார் என்றால் (10,000×0.5/100) 50 ரூபாய் தரகுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
டெலிவரியைப் பொறுத்தவரை, பங்கை வாங்கியதற்கு தனியாக கான்ட்ராக்ட் நோட்கள், ஸ்டேட்மென்ட் கள் வழங்கப்படும். எனவே, தரகுத் தொகை போக மீதமுள்ள தொகை கையாளுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். இங்கு தரகுத் தொகை, குறைந்தபட்சமாக முதலீட்டாளரிடமிருந்து பெற வேண்டிய 25 ரூபாய் தொகையைவிட கூடுதலாக இருப்பதால் கையாளுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அதேபோல் வாங்கிய பங்குகளை சில நாட்களுக்குப் பிறகு 11,000 ரூபாய்க்கு விற்கிறார் என்றால் (11,000×0.5/100) 55 ரூபாய் தரகுக் கட்டணமாக கொடுக்க வேண்டும். 
டெலிவரியைப் பொறுத்தவரை பங்கை விற்பதற்கும் தனியாக கான்ட்ராக்ட் நோட்கள், ஸ்டேட்மென்ட்கள் வழங்கப்படும். எனவே, தரகுத் தொகை போக மீதமுள்ள தொகை கையாளுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். இங்கு தரகுத் தொகையே குறைந்தபட்சமாக முதலீட்டாளரி டமிருந்து பெற வேண்டிய 25 ரூபாய் தொகையை விட கூடுதலாக இருப்பதால் கையாளுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.  இனி இதர கட்டணங்களையும் பார்ப்போம்.
சேவை வரி (Service Tax)
இன்ட்ரா டே : நாம் ஏற்கெனவே தரகருக்கு செலுத்திய தரகுக் கட்டணம் மற்றும் கையாளுதல் கட்டணத்தில் 15% சேவை வரியாக வசூலிக்கப்படும்.தரகுக் கட்டணம் (வாங்கியது 5.0 + விற்றது 5.5) + கையாளுதல் கட்டணம் (வாங்கியது 20 + விற்றது 19.5) = 50. எனவே, 50×15/100 = 7.5 ரூபாய் கட்ட வேண்டும்.
டெலிவரி: நாம் ஏற்கெனவே தரகருக்கு செலுத்திய தரகுக் கட்டணம் மற்றும் கையாளுதல் கட்டணத்தில் 15% சேவை வரியாக வசூலிக்கப்படும்.தரகுக் கட்டணம் (வாங்கியது 50 + விற்றது 55) + கையாளுதல் கட்டணம் 0 = 105. எனவே, 105×15/100 = 15.75 ரூபாய் சேவை வரியாகக் கட்ட வேண்டும்.
க்யூரிட்டி டிரான்சாக்‌ஷன் டாக்ஸ் (Security Transaction Tax)
இன்ட்ரா டே : 0.025% கணக்கிடப்படும். இந்தக் கட்டணம் மொத்த டேர்ன் ஓவரில் கணக்கிடப்பட வேண்டும். எனவே, பங்கு வாங்கியது ரூ.10,000 + பங்கு விற்றது ரூ.11,000 என மொத்தம் ரூ.21,000. இந்த 21,000×0.025 / 100 = 5.25 ரூபாய் எஸ்.டி.டி. கட்டணமாகக் கட்ட வேண்டும்.
டெலிவரி : 0.1% கணக்கிடப்படும். இந்தக் கட்டணத் துக்கு மொத்த டேர்ன் ஓவரில் கணக்கிட வேண்டும். எனவே, பங்கு வாங்கியது ரூ.10,000  + பங்கு விற்றது ரூ.11,000 என மொத்தம் ரூ.21,000. எனவே, ரூ.21,000×0.1/100 = 21 ரூபாய் கட்ட வேண்டும்.

டிரான்சாக்‌ஷன் ஃபீஸ் (Transaction Fees)

இந்தக் கட்டணத்தை மொத்த டேர்ன் ஓவரில் கணக்கிட வேண்டும். எனவே, பங்கு வாங்கியது 10,000 + பங்கு விற்றது 11,000 = 21,000. எனவே, 21,000×0.00325/100 = 0.32 டிரான்சாக்‌ஷன் கட்டணமாக வாங்கப்படும்.
செபி டேர்ன் ஓவர் டாக்ஸ் (Sebi Turn Over Fees)
இந்தக் கட்டணத்தையும் மொத்த டேர்ன் ஓவரில் கணக்கிட வேண்டும். எனவே, பங்கு வாங்கியது 10,000 + பங்கு விற்றது 11,000 = 21,000. எனவே, 21,000×0.0002/100 = 0.02 ரூபாய் செபி டிரான்சாக்‌ஷன் டாக்ஸாக வாங்கப்படும்.
முத்திரைத்தாள் கட்டணம் (Stamp uty)
இதுவும் மொத்த டேர்ன் ஓவரில் கணக்கிட வேண்டும். எனவே, பங்கு வாங்கியது 10,000 + பங்கு விற்றது 11,000 = 21,000. எனவே, 21,000*0.15/2500=1.26 ரூபாய் முத்திரைத் தாள் கட்டணமாக  வாங்கப்படும். முத்திரைத் தாள் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்’’ என்றார் ரெஜி தாமஸ்.
இனியாவது தரகரைத் தேர்வு செய்யும்போது, இந்தக் கட்டணங்களை கவனிப்பீர்கள்தானே!

Thursday, September 1, 2016

    நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ள...ும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
    நீங்கள் குணமடைவீர்கள்!

    தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
    இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
    தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
    ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
    மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
    பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
    நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
    ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
    இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
    இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
    1 கப் எலுமிச்சை சாறு
    1 கப் இஞ்சிச் சாறு
    1 கப் புண்டு சாறு
    1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
    எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
    நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
    மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
    நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
    - ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்
    உங்கள் தி.சிவசெல்வம் மருந்தாளுநர்